தீர்த்தபுரீஸ்வரர் கோவில்: Theerthapureeswarar Temple
[ad_1]
Theerthapureeswarar Temple Thiruvattathurai சிவஸ்தலம் பெயர் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருவட்டத்துறை (திருநெல்வாயில் அரத்துறை) மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர் அம்மன்/தாயார் ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி தல விருட்சம் ஆலமரம் தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு, நிவாநதி புராண பெயர் திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை ஊர் திருவட்டத்துறை மாவட்டம் கடலூர் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தீர்த்தபுரீஸ்வரர் கோவில் வரலாறு Theerthapureeswarar Temple History in Tamil அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் கோவில் திருவரத்துறை என்றும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருட...