இடுகைகள்

வழிபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Vilakku Thandu History in Tamil

படம்
[ad_1] Vilakku Thandu History in Tamil விளக்குத் தண்டு: நம் முன்னோரின் பாரம்பரிய ஒளி காவிரிப் பூம்பட்டினத்தின் பழங்காலத்திலிருந்து நம் தமிழர்கள் விளக்குத் தண்டு முறையை ஒரு புனிதச் சடங்காகக் கடைபிடித்து வந்திருக்கிறார்கள். இது வெறும் விளக்கேற்றுதல் மட்டுமல்லாமல், இயற்கை, மருத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றின் இணைப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பழக்கமாகும். புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வசிக்கும் வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் பொங்கல் விழா, விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் நடத்தும் சுமங்கலி பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. விளக்குத்தண்டு உருவான கதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பூம்பட்டின பகுதியில் வாழ்ந்த வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் முன்னோர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருள் ஈட்டி வந்தனர். வெளிநாடு சென்றவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவுக்கு ஊர் திரும்புவது வழக்கம். ஒரு ஆண்டில் வெளிநாடு சென்றிருந்தவர்கள் கப்பலில் ஊர் திரும்பி கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஆழி பேரலையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் வந்த வணிகர...

மார்கழி பாவை நோன்பு [திருவெம்பாவை]: Margazhi-Paavai Nombu

படம்
[ad_1] Margazhi-Paavai Nombu மார்கழி மாத இறைவழிபாடு பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன. திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 20 சரணங்களைக் கொண்டுள்ளது. இது திருவாசகம் என்ற தொகுப்பின் ஒரு பகுதியாகவும், தமிழ் சைவ சித்தாந்தத்தின் நியமன உரையான திருமுறையின் எட்டாவது நூலாகவும்  உள்ளது. தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் திருமணமாகாத இளம் பெண்களுக்கான பாவை சடங்கின் ஒரு பகுதியாக பாடல்கள் உள்ளன. மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மாதம் இந்த மாதத்தில் பெண்கள் ஏற்கும் விரதம், பாவை நோன்பு ஆகும். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி இறைவனை வணங்குவார்கள். இதன் மூலம் மனதிற்கு பிடித்த கணவர் கிடைப்பார்கள்.மார்கழியில் நோன்பு நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்ற...

திருச்சி திருவானைக்காவல் கோவில் சிறப்புக்கள்

படம்
[ad_1] Thiruvanaikaval Jambukeswarar Temple Special in Tamil 🛕 திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் வழியாகப் பாய்ந்தோடும் பொன்னி என்றும் தென்கங்கை என்றும் அழைக்கப்படும் காவேரி நதியின் வடகரையிலும், அதன் கிளை நதியான கொள்ளிடம் நதியின் தென்கரையிலும் ஐந்து திருச்சுற்றுக்களைக் கொண்ட திருவானைக்கா என்னும் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஐந்து மூலப்பொருள்களில்; (ஐம்பூதங்களில்) இரண்டாவதான நீர் தத்துவத்தைக் குறிக்கும் சிவத்தலமாகும். 🛕 இந்தச் சிவதலத்தில் சிவபெருமான் ஐம்புகேசுவராகவும், உமையம்மை அகிலாண்டேசுவரியாகவும் அர்ச்சை என்னும் வழிபாட்டிற்குரிய தெய்வத்திருமேனி கொண்டு எழுந்துருளியுள்ளனர். சிவபெருமான் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ள கருவறையின் விமானம் ஐந்து கலசங்களைக் கொண்டது என்பதும் ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரத்தின் வழியாக பக்தர்கள் சிவலிங்கத்தை தரிசிக்கும்படியான அமைப்பும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கவை. 🛕 இத்திருக்கோவில் சைவ சமய நாயன்மார்களான திருவாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காட...

Madurai Meenakshi Amman Temple Praharam Special in Tamil

படம்
[ad_1] Madurai Meenakshi Amman Temple Praharam Special in Tamil 🛕 தமிழகத்தை அரசாண்ட மாமன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோவில்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவை ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு உண்டு. மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ளதும், மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டதுமான ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. அதுவானது – 🛕 இறைவன் அல்லது இறைவி தெய்வத் திருக்கோலம் பூண்டு எழுந்தருளியுள்ளது மூலவர் கருவறை என்னும் கர்ப்பக்கிருகம். மூலவர் என்பது ஆதியானவர் அல்லது முதன்மையானவர் என்பதால் அக்கர்ப்பகிருகத்திற்கு மூலத்தானம் என்றச் சிறப்புப் பெயருண்டு. 🛕 அந்த மூலத்தானத்தைச் சுற்றிலுமாக உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்ட பிரகாரங்களை திருச்சுற்றுக்கள் என்பர். தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பான்மையான திருக்கோவில்கள் மூன்று திருச்சுற்றுக்கள் என்னும் மூன்று பிரகாரங்களைக் கொண்டவை. 🛕 மூலத்தானத்தைச் சுற்றி வருவதற்தாக முதலாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை முதல் பிரகாரம் என்றும், இரண்டாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை இரண்டாம் ...

Kala Bhairava Worship Benefits in Tamil

படம்
[ad_1] Kalabairavar Vazhipadu 🛕 புனித அக்னியை தன் தலையில் ஏந்தி, நிர்வாண கோலத்தில் சூலத்தை கரங்களில் ஏந்தியவாறு, நாய் வாகனத்துடன் காட்சி தருபவர், காலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் காலபைரவராவார். Kala Bhairava Worship Benefits in Tamil 🛕 கால-பைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்: 1. காலபைரவரை வழிபட்டால் கெட்ட காலத்தில் தவிப்பவர்களுக்கும் நற்காலம் பிறக்கும். 2. கண்திருஷ்டிகள் அனைத்து ஒழியும். 3. வீட்டின் முன் கதவின் மேல் காலபைரவரின் திருவுருவப் படம் இருந்தால் தீயசக்திகள், கண் திருஷ்டி, எதிர்மறை எண்ணங்கள் அகலும். 4. மேலும் ஏவல் பில்லி சூனியம் அண்டாமல் இருக்கும். 5. காலபைரவருக்கு வில்வம்,செவ்வரளி மலர் சூட்டி தீபம் ஏற்றினால் நினைத்த காரியம் கைகூடும். 6. எமபயம் நீக்கி சுகவாழ்வு அருள்வார். 7. வறுமை நிலை மாறி செல்வம் சேரும். 8. நோய், திருட்டு முதலியவை நீங்கும். 🛕 காலபைரவரை நாமும் வழிபட்டு வாழ்வில் வெற்றி பெருவோம்! நன்றி – திரு.வே.முகிலரசன். Also, read [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam...

Pooja Room Tips in Tamil

படம்
[ad_1] Pooja Room Tips in Tamil 🛕 இறைவன் இல்லா இடம் ஏது? அதனால் தான் இறைவன் “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்றனர் முன்னோர்கள். 🛕 “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி. நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயமாக இருப்பது பூஜை அறைதான். இந்த பூஜை அறை பற்றிய சில பயனுள்ள குறிப்புகளை பார்க்கலாம்: 1. பூஜை அறை கடவுள் வாசம் செய்யும் இடமாக உள்ளதால் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம். 2. கடவுளின் படங்கள், சிலைகள் முதலியவை சீர்பட அமைத்தல் வேண்டும். 3. காலை, மாலை நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது சிறந்தது. 4. எப்போதும் விளக்கு ஏற்றுவதற்கு முன் காமாட்சி விளக்கிற்கு பொட்டு வைத்து பின் ஏற்ற வேண்டும். 5. உடைந்த கண்ணாடி உடைய சுவாமி படங்கள் இருந்தால் அதை உடனே அப்புறப்படுத்தி கோவில்களில் வைத்தல் வேண்டும். 6. அனைவரின் பூஜை அறையிலும் முழுமுதற்கடவுளான விநாயகரின் திருவுருவப்படம் இருக்க வேண்டும். 7. தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜரின் படங்கள் இருந்தால் தெற்கு நோக்கி வைக்க வேண்டும். 8. ஒருபோதும் தெற்கு நோக்கியவாரு விளக்கை ஏற்றக்கூடாது. 9. அனுமன்,...

Thoppukaranam in Tamil - How to do தோப்புக்கரணம்?

படம்
[ad_1] Thoppukaranam in Tamil பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்! எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை? அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்: இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது. அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது. இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும், இதயத்தில் ஒரு பின்னல் போட்டும், புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது. வலது கால் பெருவிரலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும், இடது கால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும், புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது. சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந்து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலு...

சிவாலய ஓட்டம் - Sivalaya Ottam Story, Temples List in Tamil

படம்
[ad_1] Sivalaya Ottam 🛕 சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு சிவாலய ஓட்டம் ஆகும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, “பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்”. 🛕 சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். 🛕 சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர். 🛕 பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்த...

கணபதி ஹோமம் - Ganapathi Homam in Tamil

படம்
[ad_1] Ganapathi Homam in Tamil கணபதி ஹோமம் கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும். கணபதி ஹோமத்திற்க்கு பயன்படுத்தும் பொருட்களின் பலன்கள் மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும், உண்டாகும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி, நினைத்ததை தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) ம...

Sivalingam Saatchi Sonna Kathai - சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை

படம்
[ad_1] Sivalingam Saatchi Sonna Kathai அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன். மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் இரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை. எதிர்பாராமல் ஒரு நாள், அரதன குப்தனின் தங்கையும், அவள் கணவரும் இறந்து விட்டதாக காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து தகவல் வர, உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிப்பூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது, தாய் தகப்பனை இழந்து நின்ற இரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான். வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே, ஒரு புன்னைவனம் – அதில் ஒரு வன்னிமரம். அருகில் ஒரு சிவலிங்கம். சற்றுத் தள்ளி ஒரு கிணறு. கட்டுச்சோறை பிரித்து சாப்பிட்டு விட்டு, அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும். காலையில் கண் விழித்த இரத்னாவளி பதறிப்போனாள். கதறி அழுதாள் காரணம். அசைவற்றுக்...

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை

படம்
[ad_1] Ashtavakra Gita in Tamil நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) நம்மில் பெரும்பாலோர் அமைதியையும் ஆனந்தத்தையும், ஒரு சிலர் உண்மையையும் தேடி அலைபவர்கள், ஆனால் அந்த ரகஸியம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல்! ஒரு சிலரே ரகஸியத்தைத் தேடும் தானே அந்த ரகஸியம் என்பதையும் உணர முயல்கிறார்கள். இந்த அடிப்படை ரகஸியத்தை அறிந்துக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாகத்தான் நம் வாழ்க்கைப் பாதை  அமைகிறது. ஆன்மிகம் என்பது நம் உண்மையான இயல்பு (சத்) நிலையை உணர வழிகாட்டும் பாதை. இந்த முயற்சியில் நமக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ள வேதங்களின் சாராம்ஸங்களை, பிரம்ம தத்துவங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது தேவையில்லை, உணர்ந்து ஏற்றுக்கொள்வது சிறந்த வழி. உபநிஷத்துக்கள் இந்தக் கருத்தைதான் பல யுகங்களாக வலியுறுத்தி வருகின்றன. தன் உண்மை நிலையை உணரத் துடித்த ஒரு மன்னனுக்கு அவரது இளம் குரு ஒரு அற்புத அரிய தத்வ போதனையைத் தந்தார். இதற்காக அந்த மன்னன் பல்வேறு இன்னல்களைத் தாங்கி, தன்னை வறுத்திக்கொண்டு, காத்திருந்து பெற வேண்டியிருந்தது. யார் அந்த மன்னன்? யார் அந்த குரு? என்ன த...

காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி - Jnanagni destroys Kamagni

படம்
[ad_1] Jnanagni Destroys Kamagni in Tamil நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) ஒரு அக்னியை இன்னொரு அக்னியால்தான் அழிக்கமுடியும் முடியும். என்னங்க இது? அக்னியை நீரால் அல்லவா அழிக்கமுடியும் என்று இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்? எப்படி ஒரு அக்னி இன்னொரு அக்னியை அழிக்கும்? ஆம் நண்பர்களே, ஒரு அக்னியைக் கொண்டுதான் இன்னொரு அக்னியை அழிக்கமுடியும்! வேதங்கள் இதைத்தான் மிடுக்கோடு எடுத்துச் சொல்கிறது. பண்டைய காலத்தில், மனித வாழ்க்கையில் அக்னிக்கு (நெருப்பு) மிகுந்த முக்கியத்துவம் அளிக்கபட்டிருந்தது. அக்னியை குறிக்க பல சொற்றொடர்கள் இருந்து வந்துள்ளதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். நெருப்பை அதன் பயன்பாட்டின் பல்வேறு தன்மைகளுக்கு ஏற்ப அக்னி, தகன, ஜ்வாலன, சப்தார்சி, பாவக, ஜாதேவேதஸ், ஹுடாசன, வாஹினி போன்ற சொற்கள் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளதை புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ரிக் வேதத்தில், அக்னியை ‘ஓம் அக்னிம்லே புரோஹிதம்’ என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. ‘யக்ஞத்தை நடத்தும் புருஷர்களுக்கு ஹிதமாக இருக்கும் அக்...

Only Spiritual Ethics can Protect Young People in Tamil

படம்
[ad_1] Only Spiritual Ethics can Protect the New Generation நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) செல்வத்தை மட்டுமே குறியாகத் தேடும் கலாசாரத்தை ஏற்று உலகமே வேகமாக மாறிவரும் நிலையில் வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை பண்புகள் இந்த நவீன காலத்துக்கு எப்படி பொருந்தும்? என்று என்னைக் கேட்டார் ஒரு இளம் நண்பர். தொடர்ந்து, ‘இது தற்போது இளைய தலைமுறையினர் எழுப்பும் கேள்வி’ என்றார். முக்கியமான கேள்வி. பதில் சொல்கிறேன், கவனமாகக் கேள், என்றேன். காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி பயனடைந்து வந்த வேத சாஸ்திரங்களுக்கு, இந்த பாரம்பரிய கலாசார வழிகாட்டிகளுக்கு, ‘இக்கால நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி, அவைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ நம் இளையத் தலைமுறையினர் தயங்குகிறார்கள். அனைத்து கலாசாரங்களும் சங்கமித்து ‘உலகமயமாகி’ வரும் இந்தக் காலத்தில் வேதமாவது, பண்டைய கலாசாரமாவது! என்று அவர்கள் எள்ளிநாகையாடுவது நம் கண்கூடாகக் காணும் ஒரு சோக நிகழ்வு. உலகத்துக்கே ஆன்மிக வாழ்வியல் தத்துவத்தை பறைசாட்டிய இந்த மண்ணில்...

பிருகு உணர்ந்த உண்மை - Sage Bhrigu Perceived Truth in Tamil

படம்
[ad_1] Sage Bhrigu Perceived Truth ப்ரிகு உணர்ந்த உண்மை நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) நாம் யார்? நம்மைப் படைத்தவன் யார்? நம்முடைய உண்மை இயல்பு என்பது என்ன? நம் கண் எதிரே நாம் காணும் உலகம் என்பது என்ன? வேதங்கள் கூறும் தெய்வீகத்தை உணருவது எப்படி? தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்தக் கேள்விகளைக் கேட்காத நபர்கள் வெகு குறைவு. முன்னொரு காலத்தில் பிருகு என்கிற மாணவனும் இந்தக் கேள்விகளைக் கேட்டதோடு அல்லாமல் கேள்விகளுக்கான பதிலையும் முனைப்புடன் தேடினான். கேள்விகளையும் பதிலையும் முழுமையாக உணர்ந்து தெளிந்தபோது, இந்த உலகமே அவனை அறிந்தது. குருகுல கல்வியில் தேர்ச்சி பெற்று, அடிப்படை கேள்விகளுக்கு விடை தேடி அலைந்தபோது, தன் தந்தையும், குருவுமான வருணமுனியை அணுகி தனக்கு உதவி செய்ய வேண்டினான். ஆர்வமுடன் ஆன்மீகத் தேடலை மேற்கொண்டுள்ள தன் மகனுக்கு முதலில் மனித உடல், உள்ளம், எண்ணம், புத்தி ஆகியவைகளுக்கு அடிப்படையாக விளங்கும் ‘ஐந்து கோச விவேக’ தத்துவ நிலைகளை விளக்கினார் குரு. (கோசம் என்பது கூடு). ஐந்து புலன்கள் அடங்கிய உடல் அன்னத்தால் ஆனது. இது அன்...

ஆன்மிகப் பாதையிலிருந்து நம்மை விலகத் தூண்டும் 8 காரணிகள்

படம்
[ad_1] 8 Factors that can Derail us from the Spiritual Path in Tamil நன்றி: வெ நாராயணமூர்த்தி (ஆன்மிக நெறியாளர்) நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு ரகங்களுக்குள் அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது (பெரும்பாலான மற்ற நேரங்களில்). இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை. பரம்பொருள் சிந்தனை என்பது பொதுவாக ஆன்மிக அல்லது தெய்வீகச் சிந்தனை. கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள், தானம், தியானம், போன்றவையாக இருக்கலாம். பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக இருக்கலாம். இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகோடு நம் புலன்கள் உறவாடுவதை மையமிட்டே நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன. இதைச் சார்ந்தே நம் வாழ்க்க...