சரஸ்வதி பூஜை - Saraswathi Pooja Procedure in Tamil
[ad_1]
சரஸ்வதி பூஜை (Saraswathi Pooja) ஆயுத பூஜை (Ayudha Pooja in Tamil) 🛕 நவராத்திரியின் இறுதி நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையை இரவு நேரத்தில் பூஜித்து வழிபடுவதே சிறந்தது. இந்த 8 நாட்களும் விரதமிருந்து பூஜித்து வழிபடுவது இறுதி நாளாகிய சரஸ்வதி பூஜை அன்று நிறைவேறும் என்பது ஐதீகம். 🛕 புராணங்கள் அடிப்படையில் மகிஷாசுரன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மூன்று தேவியர்களும் ஒன்பது நாட்கள் தவமிருந்து இறுதியில் மூவரும் இணைந்து ஒரே தேவியாக உருவெடுத்து மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்தனர். இதனையே நவராத்திரி நமக்கு உணர்த்துகிறது. 🛕 இந்த போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போற்றும் வகையில் ஆயுத பூஜையானது கொண்டாடப்படுகிறது. இந்த போரில் வெற்றி பெற்ற நாளையே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. Saraswathi Pooja Procedure in Tamil வீட்டில் சரஸ்வதி பூஜை வழிபடும் முறை 🛕 முதலில் வீட்டை கங்கை நீரால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் முன் பகுதியில் தாமரைப் பூ போன்ற மாக்கோலம் போடப்பட வேண்டும். பின் வீட்டில் தோரணம் கட்டி ப...