Thirugnanasambandar History in Tamil - திருஞானசம்பந்தர்
[ad_1]
Thirugnanasambandar History in Tamil திருஞானசம்பந்தர் சோழ நாட்டில் சீர்காழி என்னும் திருத்தலத்தில் அந்தணர் குலத்தைச் சார்ந்த சிவபாத இருதயர் – பகவதி அம்மையார் தம்பதிகளுக்கு தோணியப்பர் அருளால் மகனாக அவதரித்தார். சம்பந்தருக்கு மூன்று வயதாக இருக்கும்போது ஒருநாள் சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் (சட்டைநாதர்) கோவிலுக்கு செல்லும்போது தானும் வருவதாக அடம்பிடித்து உடன் சென்றார். சிவபாத இருதயர் குழந்தையை கோவிலுக்குள் உள்ள குளக்கரையில் அமரவைத்துவிட்டுக் குளத்தில் நீராடினார். தந்தையைக் காணாத குழந்தை அழுதது. உடனே, இறைவன் உமாதேவியோடு காளை வாகனத்தில் தோன்றினார். உமாதேவி குழந்தைக்குப் பொற்கிண்ணத்தில் தாய்ப்பால் ஊட்டினார். பின்னர் இருவரும் மறைந்தனர். நீராடிவிட்டு குளக்கரைக்கு வந்த சிவபாத இருதயர் குழந்தையின் கடைவாயில் பால் ஒழுகுவதைக் கண்டு ஆத்திரம் கொண்டு அருகில் கிடந்த குச்சியை எடுத்து அடிக்க ஓங்கி, யார் கொடுத்த பாலை உண்டாய் என்று கேட்டார். ஞானசம்பந்தர், இறைவன் காட்சி அளித்து, இறைவி பால் கொடுத்ததைக் குறிப்பால் உணர்த்தும் “தோடுடைய செவியன்” என்னும் பாடலைப் பாடினார். இந்...