கந்த சஷ்டி திருவிழா | kandha sasti surasamharam
[ad_1]
கந்த சஷ்டி – kandha sasti பரமேசுவரனுக்கும் பார்வதிக்கும் புத்திரராக அருள்பாலித்த முருகப் பெருமான் தேவர்களுக்குத் தொல்லை தந்த சூரபத்மன் , தாரகன் சிங்கமுகன் போன்ற கொடிய அரக்கர்களை சம்ஹாரம் செய்தார். கந்தப் பெருமான் தமது வேலாயுதத்தால் சூரபத்மனை இரு கூறாக்கினார். அவரது பேரருளால் ஒன்று சேவலானது, மற்றொன்று மயிலானது. மால்மருகன் மயிலை வாகனமாகக் கொண்டார். சேவலைக் கொடியிலே கொண்டார். கந்தப்பெருமான் சூரபத்மாதியரை ஒடுக்கப்போர் புரிந்த திருவிளையாடலைத்தான் கந்தர் சஷ்டி விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி வரலாறு இந்தப்போர் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்கள் சூரபத்மனைக் சேர்ந்த வீரர்கள் பலரைத் தோற்கடித்த நாள். அடுத்த ஆறு நாட்கள்தான் பாநுகோபன், சிங்கமுகன் சூரபத்மன் போன்றவரை கந்தவேள் வென்று வாகை சூடிய திருநாள்.இந்தப் போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் நடந்தது. போரின் இறுதி நாள் சஷ்டி திதியன்று குரபத்மனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான் எனவே ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் ஆறு நாட்களும் சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியில் வரும் விரதமான