மார்கழி மாத சிறப்புகள் - Margazhi Month Special in Tamil
[ad_1]
Margazhi Month Special in Tamil மார்கழி மாத சிறப்புகள் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் “சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம்” என்று பொருள். அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார். உத்தராயணம், தக்ஷிணாயணம் காலத்தை கணக்கிடுவதற்கு என சில அளவு கோல்கள் உள்ளன. வருடம் அயனம், மாதம், பக்ஷம், வாரம் என்பவை நடைமுறையில் உள்ளன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் எனவும், இரண்டு அயனங்கள் எனவும் கணக்கிட்டுள்ளனர். இரண்டு அயனங்களும் முறையே உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர். “தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு உத்தராயணம் எனவும், “ஆடி மாதம் முதல் மார்கழி முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு தக்ஷிணாயனம் எனவும் பெயர். மனித இனத்திற்கு கால அளவு உள்ளது போன்றே தேவர்களுக்கும் கால அளவு உண்டு. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது ஒரு பகல் ஒரு இரவு. தை மு...