இடுகைகள்

ஞனயற லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஞானயிறு கோவில் | ஞாயிறு சூரியன் புஷ்பரதேஸ்வரர் கோவில்

படம்
[ad_1] புஷ்பரதேஸ்வரர் – திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு (ஞாயிறு கோவில்) என்னும் கிராமத்தில் சூரியன் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஊர் ஞாயிறு என்று அழைக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவிலில் சொர்ணம்பிகை உடன் புஷ்பரதேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். கிரக தோஷம் நீங்க வணங்க வேண்டிய புஷ்பரதேஸ்வரர் இவரை பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்கு உள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டு பலன் பெறுகின்றனர். தாமரை மலரில் ஐக்கியமான ஜோதி தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தான். அந்த ஜோதி, இங்கு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்த