5 மினிட்ஸ் மெது போண்டா ரெசிபி
[ad_1]
- Advertisement - மெது போண்டா, மெது பக்கோடா, மினி போண்டா, குட்டி போண்டா, பக்கவடை, சந்தை போண்டா என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த போண்டா மழைக்காலத்தில் சுடச்சுட டீயுடன் சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான டேஸ்டியான 5 நிமிடத்தில் எளிதாக செய்யக் கூடிய இந்த மெது போண்டா சுடச்சுட தயாரிப்பது எப்படி? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். மெது போண்டா செய்ய தேவையான பொருட்கள் : மைதா மாவு – ஒரு கப் கடலை மாவு – அரை கப் பச்சரிசி மாவு – கால் கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ரெண்டு கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு தயிர் – 50ml சோடா உப்பு – 3 சிட்டிகை உப்பு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – தேவையான அளவு மெது போண்டா செய்முறை விளக்கம் : இந்த மெது போண்டா செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவே சுலபமாக ஐந்து நிமிடத்தில் செய்து அசத்தக் கூடிய இந்த போண்டாவில் சுவைக்கு பஞ்சம் இருக்காது. சூட...