5 மினிட்ஸ் மெது போண்டா ரெசிபி

[ad_1] - Advertisement - மெது போண்டா, மெது பக்கோடா, மினி போண்டா, குட்டி போண்டா, பக்கவடை, சந்தை போண்டா என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த போண்டா மழைக்காலத்தில் சுடச்சுட டீயுடன் சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான டேஸ்டியான 5 நிமிடத்தில் எளிதாக செய்யக் கூடிய இந்த மெது போண்டா சுடச்சுட தயாரிப்பது எப்படி? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். மெது போண்டா செய்ய தேவையான பொருட்கள் : மைதா மாவு – ஒரு கப் கடலை மாவு – அரை கப் பச்சரிசி மாவு – கால் கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ரெண்டு கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு தயிர் – 50ml சோடா உப்பு – 3 சிட்டிகை உப்பு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – தேவையான அளவு மெது போண்டா செய்முறை விளக்கம் : இந்த மெது போண்டா செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவே சுலபமாக ஐந்து நிமிடத்தில் செய்து அசத்தக் கூடிய இந்த போண்டாவில் சுவைக்கு பஞ்சம் இருக்காது. சூடான காஃபி அல்லது டீயுடன் வைத்து பரிமாறும் பொழுது மனதிற்கும், நாவிற்கும் இனிமையை தரக் கூடிய இந்த போண்டா எப்படி செய்வதென்று பார்ப்போம். குட்டி குட்டி போண்டாக்கள் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதற்கு முதலில் ஒரு பெரிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். - Advertisement - அதே கப்பில் மற்ற எல்லா பொருட்களையும் அளந்து சேர்க்க வேண்டும். அரை கப் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கால் கப் அளவிற்கு அதே கப்பில் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு வீட்டில் அரைத்ததாக இருந்தாலும் சரி, கடையில் வாங்கினதாக இருந்தாலும் பரவாயில்லை. பின்பு இவற்றுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ரெண்டு பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். அரை கைப்பிடி அளவிற்கு மல்லி தழையும், ரெண்டு கொத்து கருவேப்பிலையும் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தூவுங்கள். பின்னர் இதனுடன் 50ml கெட்டியான தயிர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு கெட்டி ஆக கரைத்துக் கொள்ளுங்கள். இதில் எந்த விதமான மசாலா பொருட்களும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. போண்டா என்றாலே சோடா உப்பு கொஞ்சம் போல் போட்டால் சரியாக வரும். விருப்பமில்லாதவர்கள் இதனை தவிர்க்கலாம். ரெண்டு அல்லது மூன்று சிட்டிகை அளவிற்கு சோடா மாவு சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். - Advertisement - இதையும் படிக்கலாமே:மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி பிள்ளையார் வழிபாடு அவ்வளவுதான், இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறிதளவு மாவை விட்டுப் பாருங்கள், மேலே எழும்பி வந்தால் குட்டி குட்டி போண்டாக்களாக எல்லா இடங்களிலும் மாவை விட்டு இரண்டு நிமிடத்தில் பொன்னிறமாக ஒன்று போல எல்லா பக்கமும் சிவந்ததும் எடுத்து விடுங்கள். இது சீக்கிரமே வெந்து வந்து விடும். சுவையான இந்த மெது போண்டா சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள், நிச்சயமாக எல்லோரும் பாராட்டி தள்ளுவார்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/5-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b0%e0%af%86%e0%ae%9a/?feed_id=3658&_unique_id=676c44d919be2

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil