இடுகைகள்

benefits லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல நோய்களை தடுக்கும் கீழாநெல்லி | Keelanelli juice benefits

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உடல் என்பது மிகவும் அற்புதமான ஒன்று. பொதுவாகவே நம்முடைய உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுகிறது என்றால் நம்முடைய உடலே அந்த பாதிப்பை சரி செய்வதற்கு முயற்சி செய்யும். அது புரியாமல் தான் நாம் சிறிது உடல்நிலை சரியில்லை என்றாலும் உடனே மருத்துவரை சென்று பார்க்கிறோம். நம் உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதற்காக உதவக்கூடிய உறுப்பாக திகழ்வதுதான் கல்லீரல். நம் உடலின் மருத்துவர் என்று கூட கல்லீரலை நாம் கூறலாம். அப்படிப்பட்ட கல்லீரலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுவது தான் கீழாநெல்லி. கீழாநெல்லியை நாம் எப்படி சாப்பிட்டால் மருத்துவரை அனுக வேண்டாம் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். உடலின் மருத்துவர் கல்லீரல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாக தான் கீழாநெல்லி திகழ்கிறது. பொதுவாக மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கீழாநெல்லியை சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்பை சரி செய்வதற

முடக்கத்தான் பலன்கள் | Mudakathan keerai benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சில பொருட்களை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் அது நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதை தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அதை நாம் மறந்துததால் தான் இன்றைய காலத்தில் பலரும் இளம் வயதிலேயே மூட்டு வலி, முடி உதிர்வு, இதய நோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இவை அனைத்தையும் சரி செய்வதற்குரிய ஒரு இலையைப் பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். பல இடங்களில் வேலி ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கக்கூடியது தான் இந்த முடக்கத்தான் கீரை. இந்த கீரையை பறித்து நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு பல ஆரோக்கியங்கள் ஏற்படும். இந்த கீரையின் பெயரே முடக்கத்தான் கீரை. அதாவது முடக்கு அறுத்தான் கீரை. முடக்கு என்றால் முடங்கிப் போவது. யார் ஒருவரால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிமையாக போக முடியாமல் முடங்கி கிடக்கிறார்களோ அவர்களுடைய முடக்கத்தை நீக்குவதற்குரிய அற்புதமான மருந்து என்பதால் தான் இதற்க

பாதாம் பிசின் நன்மைகள் | Badam pisin benefits

படம்
[ad_1] - Advertisement - வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக என்னென்ன பொருட்களை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தேடி கண்டுபிடித்து சாப்பிட தொடங்குவோம். வெயில் காலம் முடிந்ததும் அந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுவோம். அந்த வகையில் நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருளாக கருதப்படுவது தான் பாதாம் பிசின். வெயில் காலத்திற்கு மட்டும் சாப்பிட வேண்டிய பொருளாக இது திகழ்வது கிடையாது. இதில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த மருத்துவ குணங்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக வெயில் காலத்தில் சப்ஜா விதைகள், பாதாம் பிசின், நன்னாரி சர்பத், எலுமிச்சம்பழ ஜூஸ், நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வோம். இவ்வாறு நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணமாவதை நம்மால் தவிர்க்க முடியும். இவை அனைத்தும் உடல் உஷ்ணத்தை மட்டும் தான் சரி செய்பவை என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு பொருளுக்கும் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

வெண்பூசணி சாறு பயன்கள் | Ash gourd juice benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் நம்முடைய அன்றாட உணவு பழக்கமாக உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படும். நன்மைகளோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் வராமல் தடுக்கும். இருக்கும் நோய்களையும் கட்டுப்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் குறித்த பதிவில் வெண்பூசணி சாறை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வெண்பூசணி சாறை நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி பூர்வமாக கூறப்பட்டு இருக்கிறது. குளிர்ச்சி தன்மை மிகுந்ததாக திகழக்கூடிய வெண்பூசணியை சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் சளி அடிக்கடி பிடிக்கும் என்று கூறுபவர்களும் சற்று கவனத்துடன் சாப்பிட வேண்டும். சரி இப்பொழுது வெண்பூசணியை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். - Advertisement - வெண்பூசணியின் சதைப்பகுதியை தான் நாம் பொதுவாக அரைத்து சாறெடுத்து குடிப்போம். ஆனால் வெண்பூசணியின் விதைகளிலும் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது. அதனால் சாறு எடுக்கும் பொழுது வெண்பூசணியில் இருக்கக்கூடிய க

சுரைக்காய் பயன்கள் | Bottle gourd health benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல உணவுப் பொருட்களை நம் முறையாக உட்கொண்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கை என்பது ஆரோக்கியமான வாழ்க்கையாக அமையும். அதை தவிர்த்ததால் தான் இன்றைய காலத்தில் அதிக அளவு நோய்வாய்ப்பட்டு இருக்கிறோம். அனைவரின் இல்லங்களிலும் யாராவது ஒருவராவது தொடர்ச்சியாக மருந்து உண்ணும் நிலைக்கு தான் ஆளாகி இருக்கிறார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று எவ்வளவு பேசினாலும் இன்றைய சூழ்நிலையில் நோய்களுடன் வாழ்பவர்கள் தான் பலர். அப்படி நமக்கு ஏற்படக்கூடிய பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற கூடிய ஒரு அற்புதமான காயாக திகழக்கூடியது தான் சுரைக்காய். இந்த சுரைக்காயை நாம் எப்படி எல்லாம் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். சுரைக்காய் என்பது வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. இது வெயில் காலத்திற்கு சிறந்த காயாக கருதப்படுகிறது. காரணம் இதில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. இதை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடல் குளிர்ச்சியாக புத்துணர்ச்சியாகவும் திகழும். சுரைக

முருங்கை பிசின் பயன்கள் | Murungai pisin benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து இவை அனைத்தும் பிசினாக வெளிவரும். இந்த பிசின் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். முருங்கைக் கீரைலும், முருங்கை காயிலும், முருங்கை பூவிலும் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அவை அனைத்தும் ஒருசேர இந்த முருங்கை பிசினிலும் இருக்கும். இந்த முருங்கை பிசினை எந்த முறையில் நாம் உட்கொண்டால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பாதாம் பிசின் போலவே இந்த முருங்கை பிசினையும் நாம் ஊற வைத்து தான் உண்ண வேண்டும். முதல் நாள் இரவே இந்த முருங்கை பிசினை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து இந்த ஊறிய முருங்கை பிசினில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு டம்ளரில் சேர்த்து வெதுவெதுப்பாக இருக்கும் சுத்தமான பசும்பாலை அதில் ஊற்றி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருக வேண்டும். - Advertisement -