பல நோய்களை தடுக்கும் கீழாநெல்லி | Keelanelli juice benefits

[ad_1] - Advertisement - நம்முடைய உடல் என்பது மிகவும் அற்புதமான ஒன்று. பொதுவாகவே நம்முடைய உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுகிறது என்றால் நம்முடைய உடலே அந்த பாதிப்பை சரி செய்வதற்கு முயற்சி செய்யும். அது புரியாமல் தான் நாம் சிறிது உடல்நிலை சரியில்லை என்றாலும் உடனே மருத்துவரை சென்று பார்க்கிறோம். நம் உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதற்காக உதவக்கூடிய உறுப்பாக திகழ்வதுதான் கல்லீரல். நம் உடலின் மருத்துவர் என்று கூட கல்லீரலை நாம் கூறலாம். அப்படிப்பட்ட கல்லீரலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுவது தான் கீழாநெல்லி. கீழாநெல்லியை நாம் எப்படி சாப்பிட்டால் மருத்துவரை அனுக வேண்டாம் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். உடலின் மருத்துவர் கல்லீரல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாக தான் கீழாநெல்லி திகழ்கிறது. பொதுவாக மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கீழாநெல்லியை சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்பை சரி செய்வதற்காக கீழாநெல்லியை சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். இதை இலைகளாகவே பறித்து கூட வெறும் வயிற்றில் நாம் சாப்பிடலாம். இதையும் தவிர்த்து நம்முடைய உடலில் பல அற்புதமான ஆற்றலை பெறுவதற்கு சில பொருட்களையும் கீழாநெல்லியுடன் சேர்த்து நாம் ஜூஸாக குடிக்கும் பொழுது பல அற்புதமான பலன்கள் நமக்கு கிடைக்கும். - Advertisement - முதலில் கீழாநெல்லியை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம். கீழாநெல்லியை நாம் சாப்பிடும் பொழுது மஞ்சள் காமாலை பிரச்சினை என்பது நீங்கும். சிறுநீரை பெருக்கி சிறுநீரகப் பிரச்சினையை நீக்கும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும். தோல் சம்பந்தப்பட்ட சொறி சிரங்கு நோய்களும் நீங்கும். மலட்டுத்தன்மையை நீக்கக்கூடிய ஆற்றல் மிக்கதாக திகழ்கிறது. சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்துவதற்கும் கீழாநெல்லி உதவுகிறது. இப்பொழுது கீழாநெல்லியை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான ஜூஸை பற்றி பார்ப்போம். ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். இதைப்போல் ஒரு கைப்பிடி அளவு புதினா இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் முழு நெல்லிக்காய் ஒன்றையும் சேர்த்து, பச்சை நிற ஆப்பில் இருந்தால் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் விட்டு விடலாம். இதனுடன் 10 பாதாம், ஒரு இன்ச் இஞ்சி சேர்த்து ஜூஸாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் வீட்டில் இருக்கும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்த வேண்டும். - Advertisement - இப்படி இந்த ஜூஸை குடிப்பதால் நம்முடைய உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்கு தேவையான அளவு புரோட்டின், மினரல்ஸ், பொட்டாசியம், விட்டமின்ஸ், அயன் போன்ற அனைத்தும் கிடைக்கும். கல்லீரல் வலிமை பெறும். ரத்தத்தில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவு குறையும். எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். நரம்பு மண்டலம் சிறப்பாக வேலை செய்யும். சிறு குழந்தைகளுக்கு இந்த ஜூசை தினமும் தருவதன் மூலம் அவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்கும். இதையும் படிக்கலாமே தோல் நோய்கள் நீங்க பல அற்புத மருத்துவ குணம் மிகுந்த கீழாநெல்லியை சிறிய வயதிலேயே நம்முடைய பிள்ளைகளுக்கு தினமும் தருவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் மருத்துவமனை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/health-tips-tamil/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை