பீட்ரூட் பன்னீர் பணியாரம் செய்வது எப்படி
[ad_1]
- Advertisement - பணியாரம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பணியார பிரியர்கள் தான். பணியாரத்தை எப்படி கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிட்டு விடலாம், அதிலும் இந்த பீட்ரூட் மற்றும் பன்னீர் சேர்த்த பணியாரம் அட்டகாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. சுவையான பீட்ரூட் பன்னீர் பணியாரம் செய்வது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பீட்ரூட் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: துருவிய பீட்ரூட் – அரை கப் துருவிய பன்னீர் – அரை கப் இட்லி மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கு ஏற்ப பீட்ரூட் பணியாரம் செய்முறை விளக்கம்: பீட்ரூட் பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்க