மஸ்ரூம் சுக்கா செய்முறை | Mushroom chukka recipe in tamil
[ad_1]
- Advertisement - நாம் உண்ணும் உணவானது ஆரோக்கியம் மிகுந்த உணவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் ஆரோக்கியமாக இருப்போம். அப்படி ஆரோக்கியமான உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து கொடுத்தோம் என்றால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவில் ஒன்றாக திகழ்வதுதான் காளான். காளானை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு காளான் சுக்காவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காளானில் செலினியம் என்னும் ரசாயன மூலக்கூறு அதிகம் இருக்கிறது. இது எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் பற்கள், நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கக்கூடிய மலட்டுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது. அடுத்ததாக இதில் இரும்பு மற்றும் செம்பு சத்து உடல் வலுவாவதற்கும், காயங்கள் வேகமாக ஆறுவதற்கும் உதவுகிறது. மேலும் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடல் எடையை குறைப்பதற்