6 Kala Pooja in Tamil
[ad_1]
Arukala Pooja in Tamil சைவ சமயக் கோவில்களில் ஆறுகால நித்திய பூஜை அல்லது ஆறு கால பூஜை என்பது ஆகம முறைப்படி தினம் நடைபெறுகின்ற ஆறு பூசைகளாகும். ஆறு கால நித்திய பூஜை 6 Kala Pooja 1. உசத்கால பூஜை முதல் பூசையான இது. சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது. ஆகமத்தின்படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நடத்தப்பட வேண்டும். இந்தப் பூசையின் போது சிவாச்சாரியார், பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியை பூஜை செய்து எடுத்துக் கொள்வார். மங்கள வாத்தியத்துடன் பள்ளியறை சென்று திருப்பள்ளி எழுச்சி ஓதுவார். பின்பு பெருமான் சிலையை மட்டும் மேள வாத்தியத்துடன் கோவிலை வலம் வந்து மூலவரான லிங்கத்தின் முன்பு வைத்து பூசை நடைபெறும். உற்சவர் சிலையில் இருந்த பெருமான், லிங்க வடிவான மூலவர் சிலைக்கு செல்வதாக நம்பிக்கை. இந்தப் பூசை அபிசேக ஆராதனையோடு முடிவடைகிறது. 2. காலசந்தி பூஜை ஆகமத்தின்படி காலசந்தி சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் நடைபெற வேண்டும். பூசையின் போது சூரியன், விநாயகருக்கு, துவாரத்திற்கு பூசை நடைபெறுகிறது. பின்பு மூலவர், பரிவாத தெய்வங்களுக்கு அர...