முருங்கை பிசின் பயன்கள் | Murungai pisin benefits in tamil

[ad_1] - Advertisement - முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து இவை அனைத்தும் பிசினாக வெளிவரும். இந்த பிசின் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். முருங்கைக் கீரைலும், முருங்கை காயிலும், முருங்கை பூவிலும் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அவை அனைத்தும் ஒருசேர இந்த முருங்கை பிசினிலும் இருக்கும். இந்த முருங்கை பிசினை எந்த முறையில் நாம் உட்கொண்டால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பாதாம் பிசின் போலவே இந்த முருங்கை பிசினையும் நாம் ஊற வைத்து தான் உண்ண வேண்டும். முதல் நாள் இரவே இந்த முருங்கை பிசினை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து இந்த ஊறிய முருங்கை பிசினில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு டம்ளரில் சேர்த்து வெதுவெதுப்பாக இருக்கும் சுத்தமான பசும்பாலை அதில் ஊற்றி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருக வேண்டும். - Advertisement - முருங்கை பிசினை மொத்தமாக ஊற வைத்தும் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். முருங்கை பிசினை தினமும் நாம் இந்த வகையில் உண்டு வர மூட்டு வலி, கை, கால் வலி, கழுத்து வலி போன்ற வலி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அதாவது இந்த முருங்கை பிசின் ஒரு வலி நிவாரணியாக செயல்படும். உடல் சோர்வு ஏற்பட்டு இருப்பவர்களுக்கு முருங்கை பிசின் நல்ல சுறுசுறுப்பை தரும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மலட்டுத்தன்மையை நீக்கி குழந்தை பாக்கியத்தை தரும் ஒரு அருமருந்தாக முருங்கை பிசின் திகழ்கிறது. மேலும் முருங்கை பிசினை தினமும் உண்பதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. ஆஸ்துமா பிரச்சினையில் இருப்பவர்கள் தொடர்ந்து முருங்கை பிசினை உண்டு வர அந்த பிரச்சினையில் இருந்து தீர்வு கிடைக்கும். இந்த வெயில்க்காலத்திற்கு ஏற்ப உடலை மிகவும் குளிர்ச்சியாக பாதுகாத்துக் கொள்ளும். இரத்தத்தை சுத்தம் செய்யும். குடலையும் சுத்தம் செய்யும். மலச்சிக்கலை நீக்கும். இதனால் மூல பிரச்சினை ஏற்படுவது குறையும். - Advertisement - முடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த முருங்கை பிசினை உண்டு வர முடி உதிர்தல் முற்றிலும் நின்று முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இதோடு மட்டுமல்லாமல் இளநரையும் போக்க உதவுகிறது. மேலும் கால்சியம் சத்து குறைபாட்டால் பல் ஆடுதல், ஈரில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளும் நீக்க இந்த முருங்கை பிசின் உதவுகிறது. கண்பார்வை தெளிவடையவும், சருமம் பொலிவாக திகழவும் இந்த முருங்கை பிசின் பயன்படுகிறது. இதையும் படிக்கலாமே: வெண்பூசணி சாறு பயன்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இருக்கக்கூடிய அனைத்து விதமான உறுப்புகளுக்கும் மிகச்சிறந்த மருந்தாக திகழக்கூடிய இந்த முருங்கை பிசினை நாமும் பயன்படுத்தி நம்முடைய உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=3472

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை