பொரி அல்வா செய்வது எப்படி | Puffed Rice Halwa Receipe in Tamil
[ad_1]
- Advertisement -
வீட்டில் பண்டிகை காலம் என்றாலே முதலில் செய்வது ஏதாவது ஒரு இனிப்பாக தான் இருக்கும். முன்பெல்லாம் இனிப்பு என்றாலே பாயாசம் கேசரி போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். இப்போதெல்லாம் நிமிடத்தில் செய்யக்கூடிய பல ஸ்வீட் ரெசிபிகள் வந்து விட்டது. அந்த வகையில் இப்பொழுது நாம் பார்க்கக் கூடிய ரெசிபியானது பொருள் வைத்து செய்யக் கூடிய அல்வா தான். எப்படியும் ஆயுத பூஜைக்கு வாங்கிய பொறி, பொறி நிச்சயம் மீதம் இருக்கும் அதை வைத்து எப்படி ஒரு அல்வா செய்வது என்பதை சமையல் குறிப்பு குறித்த இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்பொரி- 2 கப்,வெல்லம் – 1/3 கப்,துருவிய கேரட் – 1/4 கப்,ஏலக்காய் தூள் -1/2 டீஸ்பூன்,நெய் -5 டேபிள் ஸ்பூன்கோதுமை மாவு – 1 டீஸ்பூன்.முந்திரி – 10,
- Advertisement -
செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கப் பொரியை சேர்த்து ஐந்து நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பொரி ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்து சூடு படுத்தி கொள்ளுங்கள். இதில் அளந்து வைத்த முக்கால் கப் வெல்லத்தை சேர்த்து அரைக்கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கட்டிகள் இல்லாமல் கரைந்து வரும் வரை கொதிக்க விடுங்கள்.
வெல்லம் கரைந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். சூடு ஆறட்டும் இந்த அல்வா செய்வதற்கு வெல்லம் பாகுபதம் வர வேண்டிய அவசியம் கிடையாது. அடுத்ததாக ஒரு கேரட்டை துருவி கால் கப் வரும் வரை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பொரியை எந்த கப்பில் அளந்தீர்களோ அதே கப்பில் மற்ற பொருள்களையும் அளந்து கொள்ளுங்கள் அளவு சரியாக இருக்கும்.
- Advertisement -
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது முதலில் ஊற வைத்து பொரியை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து விட்டு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொரி நன்றாக ஊறி இருக்க வேண்டும். பொரி ஊறா விட்டால் அல்வா சரியான பதத்திற்கு வராது. இப்போது மிக்ஸி ஜாரில் சேர்த்து பொரியுடன் துருவிய கேரட்டையும் கொதிக்க வைத்து ஆற வைத்த வெல்லத் தண்ணீரையும் வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றக் கூடாது. அதே நேரத்தில் நீங்கள் அரைக்கும் இந்த பேஸ்ட் திப்பி திப்பியாகவும் இருக்கக் கூடாது. இப்பொழுது அடுப்பை பத்த வைத்து அதில் முதலில் மூன்று டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இதை தவிர்த்து உங்களுக்கு வேறு நட்ஸ் வகைகள் சேர்க்க விருப்பமிருந்தால் அதையும் இந்த நேரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
- Advertisement -
முந்திரி நன்றாக சிவந்து வந்தவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்து இதில் சேர்த்து கை விடாமல் கலந்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் ஏலக்காய் தூளையும் சேர்த்து விடுங்கள். இந்த கலவியில் நாம் கேரட் சேர்த்து இருப்பதால் நிறத்திற்காக வேறு எந்த பொருளையும் சேர்க்க வேண்டாம். அது மட்டும் இன்றி கேரட் சேர்ப்பதால் அல்வாவின் சுவை இன்னும் நன்றாகவே இருக்கும்.
அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்த பிறகு அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து 10 நிமிடம் வரை கைவிடாமல் கலந்து கொண்டே இருங்கள். இந்த நேரத்தில் மீதமிருக்கும் இரண்டு ஸ்பூன் நெய்யும் இடையிடையே சேர்த்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்திற்குள்ளாகவே இந்த பேஸ்ட் நல்ல ஒரு அல்வா பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு அதை எடுத்து வாழை இலையில் வைத்து கட்டி விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து வாழையிலை பிரித்துப் பாருங்கள். நல்ல சுவையுடன் கமகமவென்று ஆரோக்கியமான பொரி அல்வா தயாராகி இருக்கும்.
இதையும் படிக்கலாமே: சப்பாத்திக்கு 5 மினிட்ஸ் தால் செய்முறை
இதில் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமானது தான் இனிப்பே சாப்பிடக்கூடாது என்பவர்கள் கூட இந்த அல்வாவை தாராளமாக சாப்பிடலாம். நல்ல சுவையுடன் ஆரோக்கியமான ஒரு உணவை தயாரித்து தந்து மகிழ்ச்சியும் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.
- Advertisement -
[ad_2]
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/
கருத்துகள்
கருத்துரையிடுக