காரசாரமான காரச்சட்னி ரெசிபி | Karasaramana kara chutney recipe

[ad_1] - Advertisement - காரசாரமாக பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கக் கூடிய இந்த கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்வதற்கு ரொம்பவே ஈஸி தான். இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுக்கு சூப்பரான, சரியான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த ஹோட்டல் ஸ்டைல் கர்நாடகா கார சட்னி வீட்டிலேயே எப்படி சுலபமான முறையில் தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள போகிறோம். கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்ய தேவையான பொருட்கள் : கடலை எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – மூன்று தக்காளி – இரண்டு காஷ்மீரி மிளகாய் – 12 பூண்டு பற்கள் – நான்கு கல் உப்பு – தேவையான அளவு தாளிக்க : - Advertisement - எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன் கடலை பருப்பு – ஒரு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன். கர்நாடகா ஸ்டைல் காரச் சட்னி செய்முறை விளக்கம் : கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் மூன்று பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், நான்கு பூண்டு பற்களை சேர்த்து வதக்குங்கள். இதனுடன் ரெண்டு பழுத்த தக்காளி பழங்களை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். காரத்திற்கு வர மிளகாய் சேர்க்க வேண்டும். காஷ்மீரி மிளகாய் சேர்ப்பதால், நல்ல ஒரு பிரைட்டான நிறம் கொடுக்கும். காரமும் அதிகம் இருக்காது, சுவையும் சூப்பராக இருக்கும். காஷ்மீரி மிளகாய் இல்லாதவர்கள் மூன்று சாதாரண வர மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். - Advertisement - இப்போது தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்து வதக்கி விடுங்கள். பின் ஒரு சேர மசிந்து வந்ததும், அப்படியே ஆற வைத்து விடுங்கள். ஆறிய பிறகு ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த விழுதுடன் சிறு தாளிப்பை சேர்த்தால் ருசிக்கும். தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இதையும் படிக்கலாமே:கடன் தீர தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம். பருப்பு வகைகள் பொன்னிறமாக வறுபட்டதும், சீரகம் சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் கடைசியாக கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, தாளிப்பை சட்னியுடன் கொட்டி சுடச்சுட இட்லி, தோசை, ஊத்தப்பம், உப்புமா போன்றவற்றுடன் பரிமாறும் பொழுது சூப்பராக இருக்கும். எல்லோருமே விரும்பி சாப்பிடக் கூடிய இந்த கர்நாடகா ஸ்டைல் கார சட்னி இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%86%e0%ae%9a/?feed_id=3623&_unique_id=6769a16307970

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil