திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்

[ad_1] - Advertisement - இந்து கோவிலில் அவ்வப்போது பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் 30 வருடங்கலாக வாய் பேச முடியாத வாலிபர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசி உள்ளார். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். சென்னை, திருவேற்காட்டை சேர்ந்தவர் பாலாஜி, 30 வயதான இவர் ஒரு சிவன் கோவிலில் உள்ள முதியவருக்கு பணிவிடை செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கந்தசஸ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் வந்து விரதம் இருப்பது பாலாஜியின் வழக்கம். அதே போல அவர் இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்செந்தூர் வந்தடைந்தார். - Advertisement - கந்தசஷ்டி விழாவின் நான்காவது நாளன்று அவர் விரதம் இருந்துகொண்டிருக்கையில் பசுமை சித்தர் என்றழைக்கப்படும் வைத்தியலிங்கம் என்பவர் பாலாஜிக்கு ஓம், முருகா, ஓம் முருகா போன்ற வார்த்தைகளை சொல்ல கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த பயிற்சி அன்றைய நாள் முழுக்க தொடர்ந்தது. யாரும் எதிர்பாராத வண்ணமாக அன்று மாலை பாலாஜி, ஓம் முருகா என்று ஓரளவிற்கு சொல்ல துவங்கினார். இதனை அடுத்து பயிற்சியின் அடுத்த கட்டமாக அம்மா, அப்பா போன்ற வார்த்தைகளை பசுமை சித்தர் பாலாஜிக்கு கற்றுக்கொடுத்தார். பல கட்ட முயற்சிக்கு பிறகு அம்மா அப்பா போன்ற வார்த்தைகளை பாலாஜி சொல்ல துவங்கினார். இது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. - Advertisement - இதையும் படிக்கலாமேஎந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் தெரியுமா ? திருச்செந்தூர் முருகன் கோவிலில் இதற்கு முன்பும் வாய் பேச முடியாதவர்கள் வாய்ப்பேசிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. முருகனின் திருவடியை எப்போதும் பற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு அவர் நிச்சயம் ஒருநாள் வினைகளை தீர்ப்பார் என்பதற்கு பாலாஜி ஒரு சிறந்த உதாரணம். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/?feed_id=39&_unique_id=663496817b41e

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை