இன்றைய ராசிபலன் – 12 செப்டம்பர் 2024

[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நிறைய வேலைகளில் உங்களுடைய திறமை வெளிப்படும். இந்த வேலையை நம்மால் செய்ய முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்குள்ளேயே இருந்திருக்கும். ஆனாலும் பாருங்க, அவ்வளவு பெரிய வேலையை சுலபமாக செய்து முடிக்கும் திறமை உங்களுக்குள் இருந்தது என்று உங்களுக்கு இத்தனை நாள் தெரியாம போச்சே. நிறைய வியப்புகளை கொடுக்கக்கூடிய இந்த நல்ல நாளுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் கை கூடி வரக்கூடிய நாள் இன்று. நீங்கள் செய்ய வேண்டிய சுப காரியங்களை எல்லாம் இன்று செய்யலாம். பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும். உங்களுக்கு இன்று ராசியான நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தலாம். தொழிலில் புது விஷயங்களை அறிமுகப்படுத்தலாம். நல்லது நடக்கும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். சுறுசுறுப்பாக உங்களுடைய நாள் தொடங்கும். இந்த நாள் மனைவியின் ஆதரவும் கிடைக்கும். நல்ல சாப்பாடு நல்ல உறக்கம் இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை தொழிலில் எல்லாம் பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்ல செய்தி ஆச்சரியத்தை கொடுக்கும். எதிர்பாராத பரிசு மன மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். சமாளிப்பது உங்கள் திறமை. தொழிலில் பாட்னரின் மூலம் நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். தெரிந்தவர்கள், நமக்கு நல்லது நினைப்பவர்கள், சொல்வதை செவி கொடுத்து கேட்டாலே போதும் வெற்றி நம் பக்கம் நிற்கும். ஆனால் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை அதற்கு முன்பு நீங்கள் ஆராய்ச்சி செய்து கொள்ளுங்கள். - Advertisement - சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாந்தமான நாளாக இருக்கும். முன்கோபமே இன்று வராது. யார் எந்த டார்சரை கொடுத்தாலும் தாங்கிக் கொண்டு நீங்க பாட்டுக்கு உங்களுடைய வேலையை செய்வீர்கள். சோகத்திலும் ஒரு சுகத்தை அனுபவிப்பீர்கள். இதுபோல சிலரால் மட்டும் தான் இருக்க முடியும். அந்த பாக்கியம் இன்று உங்களுக்கு கிடைக்கும். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக் கூடிய நாளாக இருக்கும். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சில வேலைகளை செய்வீர்கள். கடமையும் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். இது உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லதை கொடுக்கும். கணவன் மனைவி வேறுபாடு சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். நிதி நிலைமை சீர்படும். - Advertisement - துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். நீங்களே தேடி தேடி போய் அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிறைவை அடைவீர்கள். பொதுப்பணிகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். வேலையில் சின்ன சின்ன டென்ஷன்கள் வந்து போகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்ய அயராது உழைப்பீர்கள், இருந்தாலும் இன்று உங்களுக்கு ஒரு மன நிறைவான நாளாக தான் அமையும். வேலை தொழில் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அது சகஜம். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டிகள் அதிகமாக இருக்கும். வெற்றியடைய கடினமாக போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். நிறைய பாடங்களை அனுபவப் பூர்வமாக படிப்பீர்கள். நல்லதை நல்லபடியாக எடுத்துக் கொள்ளுங்கள். கேட்டதை அந்த இடத்திலேயே விட்டு விடுங்கள். தனுசு தனுசு ராசிக்காரர்கள் இன்று புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கலைஞர்களுக்கு எல்லாம் இன்று நல்ல முன்னேற்றம் கொடுக்கும் நாளாக அமையும். புது வேலையில் சேர்வது, புது படிப்பை தொடங்குவது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்யலாம். வேலை வேலை என்று இல்லாமல் குடும்பத்தையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். மனைவியின் நலனில் அக்கறை கொள்ள மறவாதீர். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். எப்பாடுபட்டாவது குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு பிளான் பண்ணலாம். நல்லபடியாக உங்க சுற்றுலா பயணம் அமையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். புதிய முதலீட்டுக்கு கடன் முயற்சி செய்யலாம். வங்கி கடன்கள் கிடைக்கும் நல்லதே நடக்கும். கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகளை எண்ணி பார்க்க முடியாது. காலை மாலை என்று இந்த நாள் பிசியாக செல்லும். இடையிடையே கொஞ்சம் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய நல்லது சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். தொழிலில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கணக்கு வழக்குகளை சரியாக பார்க்க வேண்டும். முதலீட்டில் அகல கால் வைக்க கூடாது. முன்பின் தெரியாத நபர் சொல்லு விஷயங்களை அப்படியே கேட்டு செயல்படுத்தக் கூடாது. மீனம் மீன ராசிக்காரர்கள் இன்று சாதுவாக நடந்து கொள்வீர்கள். எல்லா விஷயத்திலும் உங்களுடைய போக்கு அனுபவசாலிகளையே மிஞ்சும். இதுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான நிறைய வித்தைகளை கற்று வைத்துக் கொள்வீர்கள். திறமையை எப்படி பணமாக்கலாம், பணத்தை எப்படி சேமிக்கலாம் என்று சிந்திக்க தொடங்கி விடுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகளால் உங்கள் எதிர்காலம் பிரகாசிக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/jodhidam-prediction/indraya-rasi-palan/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-12-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024