63 நாயன்மார்களின் வரலாறு

63 நாயன்மார்களின் வரலாறு

நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். 63 நாயன்மார்கள் வரலாறு முழுவதுமாக அனைவருக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். சிவனின் பெருமைதனை போற்றி சிவத் தொண்டு புரிந்த அந்த அறுபத்தி மூவரின் வாழ்க்கையை சிவ அருள்பெற நினைப்போரெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றாகும். அவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது. நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.

63 Nayanmars Name List in Tamil

வ.எண் பெயர் குலம் பூசை நாள்
1 அதிபத்தர் பரதவர் ஆவணி ஆயில்யம்
2 அப்பூதியடிகள் அந்தணர் தை சதயம்
3 அமர்நீதி நாயனார் வணிகர் ஆனி பூரம்
4 அரிவட்டாயர் வேளாளர் தை திருவாதிரை
5 ஆனாய நாயனார் இடையர் கார்த்திகை ஹஸ்தம்
6 இசைஞானியார் ஆதி சைவர் சித்திரை சித்திரை
7 இடங்கழி நாயனார் வேளிர்[4] ஐப்பசி கார்த்திகை
8 இயற்பகை நாயனார் வணிகர் மார்கழி உத்திரம்
9 இளையான்குடிமாறார் வேளாளர் ஆவணி மகம்
10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர் புரட்டாசி அசுவினி
11 எறிபத்த நாயனார் மரபறியார் மாசி ஹஸ்தம்
12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர் ஆனி ரேவதி
13 ஏனாதி நாதர் ஈழக்குலச்சான்றார் புரட்டாசி உத்திராடம்
14 ஐயடிகள் காடவர்கோன் காடவர்,பல்லவர் ஐப்பசி மூலம்
15 கணநாதர் அந்தணர் பங்குனி திருவாதிரை
16 கணம்புல்லர் செங்குந்தர் கார்த்திகை கார்த்திகை
17 கண்ணப்பர் வேட்டுவர் தை மிருகசீருஷம்
18 கலிய நாயனார் செக்கார் ஆடி கேட்டை
19 கழறிற்றறிவார் சேரர்-அரசன் ஆடி சுவாதி
20 கழற்சிங்கர் பல்லவர்-அரசன் வைகாசி பரணி
21 காரி நாயனார் மரபறியார் மாசி பூராடம்
22 காரைக்கால் அம்மையார் வணிகர் பங்குனி சுவாதி
23 குங்கிலியகலையனார் அந்தணர் ஆவணி மூலம்
24 குலச்சிறையார் மரபறியார் ஆவணி அனுஷம்
25 கூற்றுவர் களப்பாளர் ஆடி திருவாதிரை
26 கலிக்கம்ப நாயனார் வணிகர் தை ரேவதி
27 கோச்செங்கட் சோழன் சோழர்-அரசன் மாசி சதயம்
28 கோட்புலி நாயனார் வேளாளர் ஆடி கேட்டை
29 சடைய நாயனார் ஆதி சைவர் மார்கழி திருவாதிரை
30 சண்டேசுவர நாயனார் அந்தணர் தை உத்திரம்
31 சக்தி நாயனார் வேளாளர் ஐப்பசி பூரம்
32 சாக்கியர் வேளாளர் மார்கழி பூராடம்
33 சிறப்புலி நாயனார் அந்தணர் கார்த்திகை பூராடம்
34 சிறுதொண்டர் மாமாத்திரர் சித்திரை பரணி
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர் ஆடிச் சுவாதி
36 செருத்துணை நாயனார் வேளாளர் ஆவணி பூசம்
37 சோமசிமாறர் அந்தணர் வைகாசி ஆயிலியம்
38 தண்டியடிகள் செங்குந்தர் பங்குனி சதயம்
39 திருக்குறிப்புத் தொண்டர் வண்ணார் சித்திரை சுவாதி
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர் வைகாசி மூலம்
41 திருநாவுக்கரசர் வேளாளர் சித்திரை சதயம்
42 திருநாளை போவார் புலையர் புரட்டாசி ரோகிணி
43 திருநீலகண்டர் குயவர் தை விசாகம்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் வைகாசி மூலம்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
46 திருமூலர் இடையர் ஐப்பசி அசுவினி
47 நமிநந்தியடிகள் அந்தணர் வைகாசி பூசம்
48 நரசிங்க முனையர் முனையரையர் புரட்டாசி சதயம்
49 நின்றசீர் நெடுமாறன் பாண்டியர் அரசர் ஐப்பசி பரணி
50 நேச நாயனார் சாலியர் பங்குனி ரோகிணி
51 புகழ்சோழன் சோழர்- அரசர் ஆடி கார்த்திகை
52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் ஆனி ஆயிலியம்
53 பூசலார் அந்தணர் ஐப்பசி அனுஷம்
54 பெருமிழலைக் குறும்பர் குறும்பர் ஆடி சித்திரை
55 மங்கையர்க்கரசியார் பாண்டியர்-அரசர் சித்திரை ரோகிணி
56 மானக்கஞ்சாற நாயனார் வேளாளர் மார்கழி சுவாதி
57 முருக நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
58 முனையடுவார் நாயனார் வேளாளர் பங்குனி பூசம்
59 மூர்க்க நாயனார் வேளாளர் கார்த்திகை மூலம்
60 மூர்த்தி நாயனார் வணிகர் ஆடி கார்த்திகை
61 மெய்ப்பொருள் நாயனார் குறுநில மன்னர் கார்த்திகை உத்திரம்
62 வாயிலார் நாயனார் வேளாளர் மார்கழி ரேவதி
63 விறன்மிண்ட நாயனார் வேளாளர் சித்திரை திருவாதிரை
https://nithyasubam.in/?p=2221

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024