பணக்கஷ்டம் நீங்க மந்திரம் | Pana kastam neenga manthiram

[ad_1] - Advertisement - பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மால் எதையுமே பெற முடியாது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பலரும் அல்லும் பகலும் பாடுபட்டு உழைக்கிறார்கள். அப்படி பாடுபட்டு உழைத்தாலும் பலருக்கும் தங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலையே இருக்கிறது. ஏமாற்றுபவர்களுக்கு அதிக அளவில் பண வரவு ஏற்படுகிறது, நியாயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பணவரவு ஏற்படுவது இல்லை என்று பலரும் புலம்பி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படி உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத சூழ்நிலையில் நமக்கு பணக்கஷ்டம் ஏற்படும். எந்த வகையில் பணக்கஷ்டம் ஏற்பட்டாலும் அந்த பணக்கஷ்டத்தை நியாயமான முறையில் தீர்ப்பதற்கு சொல்லக் கூடிய ஒரு எளிமையான மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - கஷ்டப்பட்டு உழைத்து அந்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத சூழ்நிலையில் ஒருவருக்கு எந்த அளவுக்கு மனவருத்தம் ஏற்படுமோ அதே அளவிற்கு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை விட அதிக அளவு செலவுகள் ஏற்படும் பொழுதும் ஏற்படும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த செலவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிக்கன வழிமுறைகளை பின்பற்றியும் திடீரென்று எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு நம்மை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிவிடும். இதனால் தான் பலரும் கடன் என்ற மிகப்பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். இப்படி பணம் தொடர்பாக ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கும், மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும், அதே சமயம் குபேரரின் அருளையும் பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு மந்திர வழிபாட்டு முறையை பற்றி பார்ப்போம். - Advertisement - ஒரு சிறிய மஞ்சள் நிற பட்டு துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ரூபாய் நாணயங்கள் மூன்றை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மூன்று விரலி மஞ்சளையும் அதில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மூன்று கிராம்பு, பச்சைக் கற்பூரம் மூன்று துண்டு இதை மூட்டையாக கட்டி வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு எப்பொழுதும் வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றுவோம் அல்லவா அவ்வாறு விளக்கேற்றி சாம்பிராணி தூபம் காட்டிய பிறகு இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் 84 முறை தினமும் உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதன் மூலம் இந்த மந்திரம் நமக்கு சித்தியாகும். - Advertisement - மந்திரம் சித்தியான பிறகு தினமும் 9 முறை மட்டும் நாம் உச்சரித்துக் கொண்டே வரவேண்டும். எந்த அளவுக்கு நமக்கு பண தேவைகள் இருக்கிறதோ எந்த அளவிற்கு நாம் பண கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோமோ அவை அனைத்தையும் நியாயமான முறையில் நம்முடைய உழைப்பால் ஈடு செய்வதற்குரிய அற்புதமான வழிகளை காட்டி நம்முடைய பணக்கஷ்டத்தை தீர்க்கக்கூடிய அற்புதமான மந்திரமாக தான் இந்த மந்திரம் திகழ்கிறது. மந்திரம் ஓம் நமோ பகவதே வைஷ்ரவணாய தன தீபயா நமஹ இதையும் படிக்கலாமே: கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க மந்திரம் முழு நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுடைய வாழ்க்கையில் பணம் தொடர்பான எந்த கஷ்டங்களும் ஏற்படாது . - Advertisement - [ad_2] https://nithyasubam.in/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae/?feed_id=48&_unique_id=6635f288777ea

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை