இன்றைய ராசிபலன் – 29 ஜூன் 2024

[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வாரத்தின் இறுதி நாள் என்பதால், இன்று சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். கணவன் மனைவி உறவு பலம் பெறும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். ஆனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகம் இருக்கும். புதிய வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சில பேருக்கு ப்ரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப கஷ்டங்கள் விலகும். கடன் பிரச்சனை தீரும். வருமானம் அதிகரிக்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று குடும்பத்தோடு வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களை தேடி தேடி அலைந்து திரிந்து கற்றுக் கொள்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகளுக்கு அப்ளிகேஷன் போடுவது, வெளிநாட்டுக்கு பயணம் செய்ய தேவையான முயற்சிகளை மேற்கொள்வது, போன்ற வேலைகளை இன்று செய்தால் வெற்றி காண்பீர்கள். அரசாங்க வேலை சுமூகமாக முடியும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு இன்று நல்லது நடக்கும். கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்று இனம் புரியாத பயம் இருக்கும். இதனாலையே வேலை சரியாக ஓடாது. எல்லா பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்தினால் நிச்சயம் நல்லது நடக்கும். கவனத்தை சிதற விடாதீங்க. மனதை ஒருநிலைப்படுத்த இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்யுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும். - Advertisement - சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். உடல் உபாதைகள் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. கொஞ்சம் வயதில் மூத்தவர்கள், உங்களுடைய ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எளிதில் ஜீரணமாக கூடிய பொருட்களை சாப்பிடவும். மற்றபடி தொழில் வேலை எல்லாம் சுமூகமாகச் செல்லும். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அன்றாட வேலையில் கவனம் செலுத்தினாலே போதும். தொழிலில் முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். புதிய வியாபாரிகளை முழுசாக நம்ப கூடாது. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். முன்பின் தெரியாத நட்பு தவிர்ப்பது நல்லது. - Advertisement - துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் பெரிய அளவில் பாடத்தை கற்றுக் கொடுக்கும். அனுபவரீதியாக நிறைய கற்றுக் கொள்வீர்கள். ஆகவே எந்த பிரச்சனையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். அந்த பிரச்சனையின் மூலம் வந்த அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய பிரச்சனைக்கு அடுத்தவர்களை குறை கூறாதீர்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கையில் இருக்கும் இருப்பு குறையும். இதனால் மனசு சோகமா தான் இருக்கும். என்ன செய்வது சில விஷயங்களுக்கு செலவு செய்தால் தான் வாழ்க்கையை நடத்த முடியும். வருத்தப்படாதீர்கள், வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளவும். குலதெய்வ வழிபாடு நன்மையை செய்யும். தனுசு தனுசு ராசிக்காரர்கள் மனது இன்று ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. சுப காரிய தடை விலகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வாக்குவாதம் சரியாகும். வேலையில் பெருசாக பிரச்சனைகள் இருக்காது. இருந்தாலும் சின்ன சின்ன விஷயங்களை கூட நுணுக்கமாக கவனித்து செய்வது நன்மையை தரும். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாள் சண்டை சச்சரவுகள் விலகும். தேவையில்லாத சிக்கலில் சிக்கிருந்தவர்கள் எல்லாம் அதிலிருந்து விடுபடுவீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும். சொத்து பிரச்சனை தீரும். குடும்ப சண்டைகள் தீரும். தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். இன்று இரவு நிம்மதியான தூக்கமும் வரும். கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும். வீட்டில் சுப காரியத்தடை விலகும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் பெற்றவர்களை மதிக்காமல் நடக்கக்கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால் உங்களுடைய பிரச்சனைகள் தானாக சரியாகும். மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு புகழ்ச்சிக் கிடைக்க கூடிய நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத பணம் கையை வந்து சேரும். மன நிம்மதி அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வரும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்லுங்கள். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் நிம்மதி கிடைக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=3819

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை