மேஷம் ருத்ராக்ஷ பொருத்தம்

மேஷ ராசிக்காரர்கள் ஒரு முக ருத்ராட்சத்தை அணிவது நல்லது. இதனுடன், மூன்று முகம் அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ஒரு முகம்:

மிகவும் அரிதாக கிடைப்பது ஒரு முக ருத்ராட்சம் (ஏக முகம் ருத்ராட்சம்). மோட்சம் தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது. அருவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது.

மூன்று முகம் ருத்ராட்சம்

இந்த ருத்ராட்சத்தை ஆளும் கோளாக செவ்வாய் பகவான் உள்ளார். தீயானது எல்லா கெட்டதையும் தன்னில் போட்டாலும், அது தூய்மையாக இருப்பது போல, இதை அணியும் நபருக்கு வாழ்வில் இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்து விலகி துய்மை நிலை அடைவார்.

ஐந்து முகம் ருத்ராட்சம்

ஐந்து முக ருத்ராட்சத்தை குரு பகவான் ஆளக்கூடியவர். மங்களத்தின் இறுப்பிடமாக பார்க்கப்படுகிறது. இதை அணிபவரின் ஆரோக்கியம் சிறப்பாகும். மனம் அமைதியடையும். ருத்ராட்சம் என்பது இந்த பூலோகத்தில் சிவ பெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக் கூடிய ஒரு மூலிமை மரமாகும். சித்தர்களின் அனுக்கிரகமாக்க அவர்கள் தியானம் செய்யும் போது ருத்ராட்சம் அடைந்து தியானம் செய்வார்கள். சிவன் எங்கெல்லாம் தாண்டவம் ஆடினாரோ அங்கெல்லாம் ருத்ராட்ச மரங்கள் வந்தன என இப்போதும் ஐதீகம் உள்ளன.  ருத்ராட்ச மணி எந்த அளவு இருக்க வேண்டும்? உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் ருத்ராட்ச மணி எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ; இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ; கடலை அளவுடையது அதமம். இதனைப் பின்வரும் வெண்பா ; "உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ; மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ; பாசவிதம் பாற்ற நினைப் பார். " ருத்ராட்சம் ஜெபம் செய்ய பயன்படுத்த வேண்டிய விரல்கள் அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் . (அங்குஷ்ட என்பது கட்டை விரல்; தர்ச்சனி என்பது ஆள்காட்டி விரல்; மத்திமை என்பது நடு விரல்; அனாகிகை என்பது மோதிர விரல் ; கனிஷ்டை என்பது சுண்டு விரல்.) பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? ருத்ராட்சத்தில் கிட்டத்தட்ட 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அவர்கள் ருத்ராட்சத்தை அணியலாம். பெண்கள் பொதுவாக அவர்களின் மாதவிலக்கு முழுவதும் நின்ற பின்னர் அணிவது நல்லது. அப்படி அணியும் பெண்கள் ருத்ராட்சம், பவளம், முத்து, ஸ்படிகம் ஆகியவை சேர்த்து கோர்த்து அணிந்து கொள்வது நல்லது. பெண்கள் 3,6,9 முக ருத்ராட்சங்கள் மட்டும் அணியலாம். ஆண்கள் வெறும் ருத்ராட்ச மாலையை கூட அணியலாம். சிறு சிறு ருத்ராட்சங்கள் கோர்த்த மாலையை அணியலாம். ருத்ராட்ச வழிபாடு அபிஷேகம் செய்வது எப்படி? ருத்ராட்சம் அணிபவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அதற்கு பூஜை செய்து அணிவது நல்லது. அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது பிரதோஷம் அல்லது திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நல்லது. ஒரு தாம்பூலத் தட்டு எடுத்துக் கொண்டு. அதில் ஒரு வெத்திலை வைத்து அதன் மீது ருத்ராட்சத்தை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பால், சந்தனம், விபூதி, பன்னீர், வில்வம் கொண்டு ருத்ராட்சத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அபிஷேகம் செய்வதற்கு முன் ருத்ராட்சத்தைப் பன்னீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பூஜை செய்து அணிந்து கொள்ள ருத்ராட்சத்திலிருந்து நல்ல சக்திகள் கிடைக்கும். ருத்ராட்சம் அணியும் போது சொல்லக் வேண்டிய மந்திரம்? ருத்ராட்சத்திற்கு அணிவதற்கு முன் பூஜை செய்து அதற்கு ஒரு பூ வைத்து “ஓம் ருத்ரதேவாய நமோ நமக ஓம் சிவாய நம” என்ற மந்திரத்தைச் செய்து அணிந்து கொள்ள மிக சிறப்பான சக்திகள் கிடக்கப்பெறுவீர்கள். ருத்ராட்சம் அணிபவர்கள் அசைவம் சாப்பிடலாமா? ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அணியலாம். பெண் பிள்ளைகள் மாதவிலக்கு ஆகக் கூடியவர்கள் அணியாமல் இருப்பது நல்லது. இரவில் தூங்கும் போது அதை கழற்றி பூஜை அறையில் வைத்து விடுவது நல்லது. மாமிசம் சாப்பிடுபவர்கள் அன்று ருத்ராட்சத்தை கழற்றி வைத்து விடுவது நல்லது. மறு நாள் குளித்துவிட்டு இறைவனை வணங்கி அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சம் அணிவதன் பயன்கள் : ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும். ருத்ராட்சம் குறித்த அறிவியல் உண்மை: ருத்ராட்சத்தை ஆராய்ச்சி செய்து பல முடிவுகள் வெளியிடபட்டுள்ளன. ருத்ராட்சம் உடலோடு ஒட்டிக்கொண்டு அணிந்து கொள்ளும் போது, உடலுக்குள் ஏற்படும் பல்வேறு வித நோய் கிருமிகளை அழிக்க வல்லதாக ருத்ராட்சம் உள்ளது. அதிக பதற்றம், மன அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய்கள், புற்று நோய்கள் என பல்வேறு நோய்களைப் போக்கக் கூடிய ஒரு அபூர்வமான பொருளாக இந்த ருத்ராட்சம் பார்க்கப்படுகின்றது. கெளரி சங்கர் ருத்ராட்சம் என்றால் என்ன? இரண்டு ருத்ராட்சங்கள் இணைந்து இருக்கும் கெளரி சங்கர் ருத்ராட்சம் அணிவதன் மூலம் , அம்மை, அப்பனை சேர்த்து இருக்கக் கூடிய பலனை தரும்.   https://nithyasubam.in/?p=3322

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024