தலை முதல் பாதம் வரை ஆரோக்கியம் தரும் இலை.

[ad_1] - Advertisement - ஒருவர் வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த வசதி வாய்ப்பை அவரால் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட உடல் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா? இதற்காக மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு இலையை தினமும் காலையில் நம் உட்கொண்டு வந்தால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இயற்கை அன்னை நமக்கு பல அறிய மூலிகைகளை வழங்கி இருக்கிறது. அதிலும் பல மூலிகைகள் நம் அருகிலேயே நமக்கு தினமும் கிடைக்கக்கூடிய வகையில் இருக்கிறது. அதை உணராமல் வீணாக்குவது தான் மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. அப்படி நாம் வீணாக்கும் ஒரு அறிய அற்புதமான மூலிகைதான் கருவேப்பிலை. - Advertisement - கருவேப்பிலையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. இந்த சத்துக்களால் நம் தலை முதல் பாதம் வரை இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது கருவேப்பிலையை எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். தினமும் காலையில் 15 கருவேப்பிலையை நன்றாக கழுவி வாயில் போட்டு மென்று முழுங்க வேண்டும். அவ்வளவுதான் அவ்வாறு மென்று முழுங்க விருப்பமில்லாதவர்கள் கருவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து சாறு எடுத்து அதில் சுவைக்காக எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இதுவும் பிடிக்காதவர்கள் மோரில் கருவேப்பிலையை போட்டு நன்றாக அரைத்து குடிக்கலாம். இப்பொழுது கருவேப்பிலையை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். தலை முதல் பாதம் என்று கூறிவிட்டோம் அல்லவா முதலில் தலையிலிருந்து ஆரம்பிப்போம். தலை முடி மிகவும் கருமையாக வளரும். இளம் வயதில் ஏற்படக்கூடிய இளநரைகள் அனைத்தும் மாறுவதற்கு கருவேப்பிலை மிகவும் உதவி செய்கிறது. பள்ளி பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இளநரையை முற்றிலும் நீக்கி மறுபடியும் முடியை கருமையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் வளர வைப்பதற்கு கருவேப்பிலை உதவி செய்கிறது. - Advertisement - அடுத்ததாக கண்பார்வை தெளிவு அடைய உதவுகிறது. ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் குறைகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதால் ரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்களால் உடலில் இருக்கக்கூடிய எலும்புகள் உறுதி பெற உதவுகிறது. மேலும் வளரும் குழந்தைகள் கருவேப்பிலையை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் அவர்களுடைய உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது. சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. இதையும் படிக்கலாமே: நீங்க தினமும் தலைக்கு குளிப்பீங்களா? இல்லை வாரம் ஒரு முறையா? தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா? கெட்டதா? தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்! காய்கறி வாங்கும் பொழுது ஓசியாக கிடைக்கும் இந்த கருவேப்பிலையை தினமும் நாம் உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான சத்துக்கள் கிடைத்து நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே. - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=3644

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை