தாய்ப்பாலுக்கு இணையான சத்து மிகுந்த தேங்காய் பால்

[ad_1] - Advertisement - மனிதர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்வது தான் தாய்ப்பால். தாய்ப்பாலுக்கு இணையாக வேறு எதுவுமே கிடையாது என்றுதான் கூற வேண்டும். அவ்வளவு மருத்துவ குணம் கொண்ட தாய்ப்பாலை பிறந்த குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு வருட காலமாவது அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வர பிரசாதமாக திகழ்வதுதான் தேங்காய் பால், தாய்ப்பால் அருந்தாமல் இருந்தாலும் தினமும் தேங்காய் பால் அருந்தினால் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்களை பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் தேங்காய் பாலால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். தேங்காய் பாலில் விட்டமின் சி, விட்டமின் இ, தயாமின், நியாசின், பேன்டதனிக் அமிலம், ரிபோப்ளேமின், பைரிடாக்சின், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரோட்டின், நார்ச்சத்து, நிறைவுற்ற கொழுப்பு, இயற்கை சர்க்கரை, லாரிக் அமிலம், மோனோலாரிக் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. - Advertisement - தேங்காய் பாலை தினமும் ஒரு கப் அளவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருந்த ரத்த சோகை நீங்கும். உடல் எடை குறையும். வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். ரத்த கொதிப்பு சீராக இருக்கும். கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலை பலமாக வைத்துக் கொள்ளவும் தசைகள் மற்றும் நரம்புகளை சீராகவும் இயக்க உதவுகிறது. எலும்பு தேய்மானத்திலிருந்து பாதுகாத்து எலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. ஆர்த்ரைடீஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. சருமம் பளபளப்பாகவும் இளமையான தோற்றத்தையும் பெற உதவுகிறது. தசை பிடிப்பு, மனப்பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை நீக்க உதவுகிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண், வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்க்கிறது. உடல் சூட்டை தணிக்கிறது. - Advertisement - இதோடு மட்டுமல்லாமல் தேங்காய் பாலை நம்முடைய தலைமுடிக்கு தடவுவதன் மூலம் இதில் இருக்கக்கூடிய அனைத்து சத்துகளும் தலைமுடிக்கு சேர்ந்து தலைமுடி உதிர்தல் பிரச்சினை முற்றிலும் நீங்கி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும். இதே தேங்காய் பாலை நம்முடைய சருமத்திற்கு நாம் தடவுவதன் மூலம் சருமத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் மென்மையையும் தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. சரும நிறத்தையும் அதிகரிக்கிறது. - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு அமிர்தமாகவே தேங்காய் பால் திகழ்கிறது. இந்த தேங்காய் பாலை அதிக அளவில் சேர்ப்பதை தவிர்த்துவிட்டு தினமும் ஒரு கப் வீதம் அதாவது 100 எம்எல் வீதம் அருந்தி வர மேற்கொள்ள அனைத்து சத்துகளும் நம் உடம்பிற்கு கிடைத்து ஆரோக்கியமான அதே சமயம் இளமையான தோற்றத்தையும் பெற முடியும். கேரளாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருப்பதற்கு அவர்கள் அதிக அளவில் தேங்காய் தொடர்பான அனைத்து பொருட்களையும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான் முதன்மையான காரணமாக திகழ்கிறது. இதையும் படிக்கலாமே: வேர்க்குரு நீங்க டிப்ஸ் எளிதில் கிடைக்கக்கூடிய அதே சமயம் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்கள் மிகுந்த ஒரு அமுதமாக திகழும் இந்த தேங்காய் பாலை நாமும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான இளமையான வாழ்க்கையை வாழ்வோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=3594

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை