திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாறு
Tirupati Temple History in Tamil
? “வாழ்வில் திருப்பம் நிச்சயம்” என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. அவர், இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பதும் கூட ஓர் உன்னதமான நிகழ்வுதான்! ? திருப்பதி ஏழுமலையான் கோவில் / வெங்கடேஸ்வரா கோவில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது. புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோவில் முழுக்க முழுக்க பாரம்பரிய கோவிற்கலை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.Tirupati Balaji Idol
? 2.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே 8 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆனந்த நிலைய திவ்ய விமானம் எனும் தங்க பீடத்தின் மீது இந்த சிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தின் கண்களில் ஜொலிக்கும் மாணிக்க ரத்தினக்கற்கள் பொதிக்கப்பட்டுள்ளன. ? கற்பூரம் மற்றும் குங்குமம் போன்றவையும் இவற்றோடு சேர்த்து பொதிக்கப்பட்டிருக்கிறது. ஏழுமலையானின் திருமேனிக்குப் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது என்பதை அறிவோம். சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப்போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழுமலையானுக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள்; எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை!Tirumala Temple Secrets in Tamil
? கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில், அதற்கு நேர்மாறாக கருவறையில் ஓர் இயற்கை அற்புதம் உண்டு. “அதிகாலை குளிர்ந்த நீரால் அபிஷேகிக்கும்போதும் பெருமாளுக்கு வியர்க்குமாம். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும்” என்கிறார்கள். ? அதுபோன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும், “ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவார்கள். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் கதகதப்புடன் இருப்பதை” உணரமுடியுமாம்!? திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் சிலா தோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இங்கு மட்டுமே காணப்படும் இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏழுமலையானின் திருமேனியும், இந்தப் பாறைகளும் ஒரே விதமானவை.
Tirupati Steps Route
? திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரண்டு விதமான பாதைகள் உள்ளன. அலிபிரி– அதாவது கீழ்த் திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. “அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன் முதலில் அமைத்தவர்”. ஸ்ரீவாரிமெட்டு வழி: திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்துக்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து, சமீப வருடங்களில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது. இந்த வழியை ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், கீழ் திருப்பதிக்கு அருகில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ? ஐதீக ஆசாரங்களின்படி “வராஹ ஸ்வாமியை வணங்கிவிட்டு அதன் பின்னரே ஸ்ரீ வெங்கடேஸ்வரை தரிசிக்க வேண்டும்” எனும் நெறி கடைபிடிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.Ancient History of Tirupati Temple in Tamil
? கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். ? யாகத்தை காண வந்த நாரதர், யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். “திருமால், பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென” முனிவர்கள் முடிவெடுத்தனர்.? மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல, திருமால் மறுத்துவிட்டார். லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.
Tirumala 7 Hills Names in Tamil
- சேஷாத்திரி
- நீலாத்திரி
- கருடாத்திரி
- அஞ்சனாத்திரி
- வ்ருஷபாத்ரி
- நாராயணாத்ரி
- வேங்கடாத்ரி
கருத்துகள்
கருத்துரையிடுக