மாம்பழ பர்பி செய்முறை | Mango burfi recipe in tamil

[ad_1] - Advertisement - முக்கனிகளில் ஒன்றாக திகழக்கூடிய மாம்பழத்தை மாம்பழ சீசன் வரும்பொழுது அதிகமான பேர் உண்டு மகிழ்வார்கள். இதை அப்படியே உண்பதன் மூலம் உடல் உஷ்ணம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இனிப்பு பண்டமாக செய்வதன் செய்யலாம். இப்படி செய்து கொடுப்பதன் மூலம் உடல் உஷ்ணமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். மாம்பழ சுவையும் குறையாமல் இருக்கும். பெரிதும் சிரமப்படாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மாம்பழத்தை வைத்து மாம்பழம் பர்பி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் மாம்பழம் – 2 ஏலக்காய் – 2 சர்க்கரை – 75கிராம் நெய் – 4 ஸ்பூன் கொப்பரை தேங்காய் பவுடர் – 150 கிராம் பால் – 100 எம்எல் பால் பவுடர் – 4 டீஸ்பூன் குங்குமப்பூ, வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் – விருப்பத்திற்கேற்றவாறு செய்முறை முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு மாம்பழத்தை பொடிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஏலக்காய் சர்க்கரை இவை இரண்டையும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அந்த கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அந்த நெயில் அரைத்து வைத்திருக்கும் மாம்பழ விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மாம்பழ விழுது அடி பிடிக்கும் சூழ்நிலை வரும் பொழுது அரைத்து வைத்திருக்கும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். - Advertisement - அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கொப்பரை தேங்காய் பவுடரை போட்டு அதில் பாலை ஊற்றி ஐந்து நிமிடம் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த இந்த கொப்பரை தேங்காய் விழுதை அடுப்பில் இருக்கும் மாம்பழத்துடன் சேர்த்து 5 விருந்து ஏழு நிமிடம் வரை நன்றாக கிண்ட வேண்டும். பிறகு இதில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கிளற வேண்டும். கடைசியாக இதில் பால் பவுடரை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு பால் பவுடர் நன்றாக கலக்கும் படி கிண்டி விட வேண்டும். இப்பொழுது மாம்பழ பர்பி தயாராகிவிட்டது. - Advertisement - இதை பர்பியாக மாற்றுவதற்கு ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பரை விரித்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி இதற்கு மேலே குங்குமப்பூ, வறுத்த முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா என்று உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு தூவி விட்டு நம் தயார் செய்து வைத்திருக்கும் மாம்பழ பர்பியை அதில் போட்டு நன்றாக சமன்படுத்தி வேண்டும். 4 மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு இதை தலைகீழாக கவுத்தி மேலே இருக்கும் பட்டர் பேப்பரை எடுத்து விட்டு பர்பிக்கு ஏற்றவாறு கத்தியை வைத்து நறுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மாம்பழ பர்பி தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே: மீந்த சாதத்தில் சுவையான சப்பாத்தி ரெசிபி எப்பொழுதும் ஒரே மாதிரி மாம்பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக மாம்பழத்தை வைத்து இப்படி வித்தியாசமாக பர்பி செய்து கொடுப்பதன் மூலம் சுவையும் வித்தியாசமாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=3614

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை