சாதம் வடித்த கஞ்சியின் பயன்கள் | Satham vaditha kanjin payangal

[ad_1] - Advertisement - இன்றைய அவசர உலகத்தில் பலரும் தங்களுடைய நேரத்தை மிச்சம் செய்ய வேண்டும், வேலையை சுலபமாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சாதத்தை குக்கரில் வைத்து சமைத்து விடுகிறார்கள். அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரிந்தாலும் அந்த தவறையே செய்கிறார்கள். அதை தவிர்த்து விட்டு சாதத்தை நாம் பானையில் வடித்து சாப்பிடுவதால் நமக்கு பல ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வடித்த அந்த கஞ்சியும் நம் உடலின் பல ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் வடிகஞ்சி நம்முடைய உடலுக்கு எந்த அளவுக்கு நன்மையை தருகிறது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் காலையில் எழுந்ததும் நீராகாரம் என்று ஒன்றை குடிப்பார்கள். அதுதான் அவர்களின் ஆரோக்கியமான காலை பானமாக திகழ்ந்தது. இன்றைய காலத்தில் நாமும் நம் குழந்தைகளும் அருந்தக்கூடிய பூஸ்ட் போன்விடா ஹார்லிக்ஸ் என்று இருக்கக்கூடிய எந்த பானமும் இந்த நீராகாரத்திற்கு இணை ஆகாது என்று தான் கூற வேண்டும். அவ்வளவு அற்புதமான ஆற்றல் மிகுந்ததாக தான் இந்த நீராகாரம் இருந்தது. - Advertisement - இந்த நீராகாரத்தை நாம் சாதம் வடித்த கஞ்சியை வைத்து தான் தயார் செய்தோம். இப்படி நாம் நீராகாரம் தயார் செய்யாமல் சாதம் வடித்த உடனே வரக்கூடிய வடிகஞ்சியை வைத்து கூட நம் உடலின் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வடிகஞ்சியை நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தலை முடியின் பாதுகாப்பையும் முக அழகையும் இது மேம்படுத்தும் என்று கூட கூறலாம். இன்றைய காலத்தில் கண்டிப்பான முறையில் ஒவ்வொரு இல்லத்திலும் யாருக்காவது ஒருவருக்கு பிபியோ, சுகரோ இருக்கத்தான் செய்யும். அதிலும் குறிப்பாக லோ பிபி, லோசுகர் இருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எந்த நேரத்தில் அவர்களுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு குறைகிறதோ அந்த நேரத்தில் அவர்களையும் அறியாமல் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள். - Advertisement - இந்த லோ பிபி, லோ சுகர் பிரச்சனையை தீர்க்கக் கூடிய மிகவும் அற்புதமான ஒரு பானமாக தான் இந்த வடிகஞ்சி திகழ்கிறது. லோ பிபி இருப்பவர்கள் இந்த வடிக்கஞ்சியில் உப்பு கரிக்கும் அளவிற்கு சிறிது கூடுதலாக சேர்த்து தினமும் அறிந்து வர வேண்டும். மலச்சிக்கல் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் தினமும் வெதுவெதுப்பான சூட்டில் அதாவது டீ குடிக்கும் சூட்டில் வடிகஞ்சியை குடிப்பதன் மூலம் ஒரே வாரத்தில் அவர்களின் மலச்சிக்கல் பிரச்சினை குறைய ஆரம்பிக்கும். பித்தத்தால் ஏற்படக்கூடிய மயக்கம் நீங்குவதற்கு வடிகஞ்சியை நாம் தினமும் அருந்தி வர வேண்டும். - Advertisement - மேலும் தொடர்ச்சியாக நாம் வடிகஞ்சியை அருந்துவதன் மூலம் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் நம் உடலுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. உடல் எடையும் அதிகரிக்கும். வரட்டு இருமலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் இந்த வடிகஞ்சியில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுத்தூள் போட்டு கலந்து குடிக்க வரட்டு இருமல் குறைய ஆரம்பிக்கும். தலைக்கு சீகக்காய் பயன்படுத்துபவர்கள் வடிகஞ்சியில் சீயக்காயை போட்டு கரைத்து தேய்ப்பதன் மூலம் தலைமுடி ஆரோக்கியம் மேம்படும். ஷாம்பு உபயோகப்படுத்துபவர்களாக இருந்தாலும் அவர்களும் இந்த வடிகஞ்சியில் ஷாம்புவை கரைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலைமுடி உதிர்தல் பிரச்சனையும் குறைய ஆரம்பிக்கும். முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும். முகத்தில் அதிகளவு பருக்கள் இருக்கிறது அந்த பருக்களால் கரும்புள்ளிகள் ஏற்பட்டுவிட்டது என்று கவலைப்படுபவர்கள் தினமும் வடிகஞ்சியை முகத்தில் நன்றாக பூசி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் அவர்கள் முகத்தில் இருக்கக்கூடிய பருக்களின் பிரச்சினை குறைய ஆரம்பிக்கும். அந்த பருக்களால் ஏற்பட்ட கரும்பள்ளிகளும் மறைய ஆரம்பிக்கும். மேலும் முகத்திற்கு ஒரு வித பொலிவு கிடைக்கும். இதையும் படிக்கலாமே: ஆவாரம் பூ சட்னி செய்முறை மிகவும் எளிதில் எந்தவித சிரமமும் இல்லாமல் கிடைக்கக்கூடிய வடிகஞ்சியை நாமும் பயன்படுத்தி நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்திக் கொள்வோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=3636

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil