சமையல் ருசியாக இருக்க ஒரு சில குறிப்புகள்

[ad_1] - Advertisement - புதிதாக சமைப்பவர்களாக இருக்கட்டும் அல்லது சமையலில் நன்றாக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கட்டும் அவங்களுடைய அம்மாவோ பாட்டியோ சொன்ன சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றி தான் இந்த அளவிற்கு அவர்கள் நல்ல உணவை சமைக்கிறார்கள். சமையலில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் செய்யக்கூடிய அந்த சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் அடுத்த சந்ததியினர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி என்றால் தான் அவர்கள் செய்யக்கூடிய சமையலும் ருசியாக இருக்கும். இப்பொழுது பெண்களுக்கு தேவையான சமையல் குறிப்புகளை பார்க்கலாம். தேங்காய் சட்னி என்பது காலையில் நாம் பலரும் அதிகமாக அரைக்க கூடிய ஒரு சட்னி ஆகும். அந்த தேங்காய் சட்னி சுவையாக இருப்பதற்கு பாதி அளவு தேங்காய் பாதி கொத்தமல்லி இலைகளை சேர்த்து நாம் சட்னி செய்து வந்தால் அந்த சட்னி ஆனது சுவையாக இருக்கும். - Advertisement - மாவு புளித்து விட்டது தோசை ஊற்ற முடியாது என்னும்போது ஒரு கைப்பிடி அவலை ஊற வைத்து சிறிதளவு மிளகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பால் விட்டு நன்றாக அரைத்து அதனை புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பமாக ஊற்றி பாருங்கள். புளிப்பே இருக்காது. அந்த ஊத்தாப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். எந்த ஒரு இனிப்பு வகையை செய்ய விரும்பினாலும் சர்க்கரையின்அளவை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக கற்கண்டை பொடி ஆக்கி அதனை அந்த இனிப்பு வகையில் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும். - Advertisement - முட்டைகோஸ் சமைக்கும் பொழுது அதன் வெள்ளை நிறம் மாறி சுவையும் மனமும் இல்லாமல் போய்விடும் அப்படி மாறாமல் இருப்பதற்கு ஒரு இஞ்சியை சேர்த்து சமையுங்கள். அதன் மனம் மாறாமல் அப்படியே இருக்கும். காலிஃப்ளவரை சமைக்கும் பொழுது அதில் ஒரு துளி அளவு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி பால் சேர்த்து சமைத்த அந்த காலிஃப்ளவரானது வெள்ளை கலர் மாறாமல் அப்படியே இருக்கும் பச்சை வாடை வராது. - Advertisement - இட்லி மாவு ஒரு சிலருக்கு புளித்து போய்விடும் அப்படி இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை காம்பு இல்லாமல் மாவு பாத்திரத்தில் கீழ்நோக்கி பார்த்தவாறு இரண்டு இலைகளை போட்டு விட வேண்டும். இரண்டு நாட்களுக்கு பொங்காமலும் புளிக்காமலும் மாவானது அப்படியே இருக்கும். வெயில் காலத்தில் பெருங்காயத்தூள் வாங்கி நாம் பயன்படுத்தினால் பெருங்காயத்தூள் அப்படியே இருக்கும். அதுவே பெருங்காய கட்டி வாங்கி பயன்படுத்தினால் வெயில் காலத்தில் பெருங்காயம் இன்னும் கட்டி ஆகிவிடும். இப்படி கட்டியாகாமல் இருக்க பெருங்காயத்தில் பச்சை மிளகாயை காம்போடு அப்படியே போட்டு விட வேண்டும். இதையும் படிக்கலாமே: கொள்ளு துவையல் செய்யும் முறை இந்த சமையல் குறிப்பு அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். எனவே அனைவரும் இதனை செய்து பார்த்து நல்ல ஒரு பலனை பெறுவீர்கள் என்று நம்பி இந்த பதிவினை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறோம் - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024