போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது ?

[ad_1] போகிப் பண்டிகை சிறப்பு மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை. அன்று பழைய பொருட்களை, கழித்து கொளுத்துவது வழக்கம். பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி பண்டிகையின் சிறப்பாகும். போகிப் பண்டிகை வரலாறு ஆயர்பாடியில் இந்திரவிழாவை யாதவர்கள் நடத்தியதால் இந்திரன், மூவுலகிற்கும் தானே அதிபதி என்று கர்வமுற்று இருந்தான். ஆனால் பகவான் கண்ணனோ யாதவர்களிடம் எங்கும், எதிலும் நிறைந்துள்ள விஷ்ணுவை வழிபட்டால் இந்திரனை ஏன் வழிபட வேண்டும் என்றார். உடனே அனைவரும் விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தார்கள். இதனால் கோபம் கொண்ட இந்திரன் ஆயர்பாடியில் பெரும் புயல் மழை வர மேகங்களுக்கு ஆணையிட்டான். பெரும் புயல் மழையால் கோகுலம் மூழ்கி மக்கன் அவதிப்பட்டனர். நாராயணன் மக்களை காக்க கோவர்த்தனகிரி மலையை பெயர்த்து குடையாகப் பிடித்து காத்தான். இந்த அதிசயத்தால் அரண்டுபோன இந்திரன் கண்ணன் தான் விஷ்ணு என்பதை அறிந்து கண்ணனிடம் மன்னிப்பு கேட்டான், கண்ணனும் இந்திரனை மன்னித்து, இந்திரா இனிமேல் பொங்கலுக்கு முதல்நாள் போகி என்ற உள் நாமத்துடன் கூடிய விழாவை மக்கள் கொண்டாடுவர். மேலும் “இந்திரோபேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி” என போகி தினத்தில் உள்ளன வழிபடுவர் என்று அருள் புரிந்தார். [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/hindu-festival/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை