எளிமையான காலிஃப்ளவர் கிரேவி செய்முறை | Califlower gravy recipe in tamil

[ad_1] - Advertisement - சப்பாத்தி, பூரி இதற்கு எப்பொழுதும் உருளைக்கிழங்கை வைத்து கிரேவி செய்வதற்கு பதிலாக நடுவில் உருளைக்கிழங்கிற்கு பதிலாக காலிஃப்ளவரை வைத்து கிரேவி செய்து கொடுத்துப் பாருங்கள். காலிஃப்ளவரின் எப்போதும் காலிஃப்ளவர் 65 என்று செய்வதற்கு பதிலாக இப்படி அவ்வப்பொழுது கிரேவியாகவும் செய்து கொடுக்க சுவை வேறுபாட்டின் காரணமாக அதிக அளவில் சாப்பிட ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட காலிஃப்ளவர் கிரேவியை எப்படி எளிமையான முறையில் சுவையுடன் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காலிஃப்ளவரை வீட்டிற்கு வாங்கி வந்த உடனேயே அனைவரும் சொல்வது காலிஃப்ளவர் 65 செய்து கொடுக்க சொல்லி தான். முடிந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் மிளகாய்த் தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கும் பலகாரங்களை செய்வதை தவிர்ப்பது நல்லது. இதனால் அதிக அளவில் கொழுப்பு சத்து ஏற்படுமே தவிர்த்து மற்றபடி இருக்கக்கூடிய சத்துக்கள் குறைவதற்குரிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும். அதை தவிர்த்து விட்டு இப்படி கிரேவியாக செய்து கொடுத்தோம் என்றால் அதன் சத்துக்கள் ஓரளவாவது நம்முடைய உடலில் சேரும். - Advertisement - தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் – ஒன்று எண்ணெய் – 4 ஸ்பூன் சோம்பு – ஒரு ஸ்பூன் மிளகு – ஒரு ஸ்பூன், இஞ்சி – ஒரு இன்ச், பூண்டு – 10 பல் வெங்காயம் – 4 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 சீரகம் – ஒரு ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், மல்லித்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு தண்ணீர் – 1/2 கப் கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை முதலில் கடாயை அடுப்பில் வைத்துக் கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு இவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சியும் பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் இதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இதில் தக்காளி, பச்சை மிளகாய் – 2 இவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. இப்பொழுது மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், பச்சை மிளகாய் கருவேப்பிலை இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். - Advertisement - இதற்கு முன்பாகவே காலிஃப்ளவரை சிறிது சிறிதாக நறுக்கி சுடுதண்ணீரில் உப்பு மஞ்சள் தூள் போட்டு அதில் காலிஃப்ளவரை போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் காலிஃப்ளவரில் இருக்கக்கூடிய பூச்சிகள் அனைத்தும் நீங்கும். இந்த காலிஃப்ளவரை எடுத்து கடாயில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். எண்ணையிலேயே சிறிது நேரம் வதங்கட்டும். இவ்வாறு வதங்கிய பிறகு இதில் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லி தூள், தேவையான அளவு உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக நாம் அறிந்து வைத்திருக்கும் விழுதையும் இதனுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைக்கப் தண்ணீர் ஊற்றி அதையும் கழுவி இதில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைத்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து இதில் கொத்தமல்லி தலையை தூவி இறக்கிவிடலாம். - Advertisement - கிரேவி மேலும் சுவையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 10 முந்திரி பருப்பை பாலில் ஊறவைத்து அரைத்து அந்த விழுதை கடைசியில் இந்த கிரேவியில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு இறக்குவதன் மூலம் கிரேவியின் சுவை மேலும் அதிகமாக இருக்கும். இதையும் படிக்கலாமே காரைக்கால் ஸ்பெஷல் கட்டிச்சோறு செய்முறை வெங்காயம் தக்காளியை இந்த முறையில் நாம் வதக்கி அரைப்பதன் மூலம் கிரேவியின் சுவை மிகவும் அருமையாக இருக்கும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil