கும்பகோணம் கடப்பா செய்முறை | Kumbakonam kadappa recipe in tamil

[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கும். அந்த வகையில் உணவுகளிலும் சில குறிப்பிட்ட ஊர்கள் பெயர் பெற்றதாக சில உணவுப் பொருட்கள் இருக்கும். அந்த வகையில் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமாக கருதப்படக் கூடியது கடப்பா. இது தஞ்சாவூரில் மிகவும் சிறப்பான ஒரு குழம்பாகவே கருதப்படுகிறது. இதை டிபன் அயிட்டம் அனைத்திற்குமே தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கும்பகோண கடப்பாவை எப்படி செய்வது என்று தான் சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் என்று அனைத்து விதமான டிபன் ஐட்டத்திற்கும் இந்த கடப்பாவை நாம் தொட்டுக் கொள்ளலாம். இது குழம்பாகவும் இல்லாமல் குருமாவாகவும் இல்லாமல் புதுவிதமான சுவையில் இருக்கும். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டுமே சேர்த்து செய்யக்கூடியதாக இந்த குழம்பாக திகழ்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – 1/2 கப் உருளைக்கிழங்கு – 3 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – ஒரு கப் பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன் கசகசா – ஒரு டீஸ்பூன் சோம்பு – 2 டீஸ்பூன் பூண்டு – 6 பல் இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய் – 10 எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை – 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ – சிறிதளவு வெங்காயம் – 2 கருவேப்பிலை – ஒரு கொத்து தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி தழை – சிறிதளவு செய்முறை முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் பாசிப்பருப்பையும் சேர்த்து, சுத்தம் செய்து வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், இந்த பருப்பும் உருளைக்கிழங்கும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் மட்டும் உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை விட்டு எடுக்க வேண்டும். விசில் முற்றிலும் நீங்கிய பிறகு இதில் இருக்கும் உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தலும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் சோம்பு சேர்த்து இவை அனைத்தும் நன்றாக வாசனை வந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் ஓரளவுக்கு வதங்க வேண்டும். கண்ணாடி பதம் வந்ததும் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து இதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக தக்காளி வேகம் வரை ஐந்து நிமிடம் வதக்க வேண்டும். பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் சேர்த்து இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை மூடி போட்டு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். - Advertisement - ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் நாம் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விட்டு மறுபடியும் ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். பாசிப்பருப்பு நன்றாக கொதித்த பிறகு நாம் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்து இதனுடன் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மேலே கொத்தமல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான கும்பகோணம் கடப்பா தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே பாதாம் பிசின் பால் சர்பத் செய்முறை எப்பொழுதும் தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்கு பதிலாக இந்த முறையில் கடப்பா செய்து கொடுப்பதன் மூலம் வித்தியாசமான சுவையில் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%81/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024