உடல் எடை குறைய ஜூஸ் | Udal edai kuraiya juice in tamil

[ad_1] - Advertisement - உடல் பருமனுக்கு அதிவிரைவான எடை குறைப்பை தான் இன்று பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது. எதை செய்ய வேண்டுமானாலும் அதில் ஒரு தெளிவும், நிதானமும் தேவை. செய்யும் செயல் சரியானதாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எடை குறைப்புக்கு எந்த மாதிரியான ஜூஸ் பருகுவது நல்லது? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். இன்று இருக்கும் உணவு முறைப்படி பலரும் வேகமாக எடை கூடி விடுகின்றனர். ஆனால் அதை குறைப்பது தான் கடினமாக இருக்கிறது. ஏற்றிய எடையை குறைப்பதற்கு பெரும்பாடு பட்டு கொண்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது இந்த பழச்சாறுகள்! பழச்சாறுகளை முறையாக பருகுவதன் மூலம் உடல் எடையை விரைவாகவே கணிசமாக குறைக்க முடியும். - Advertisement - உடல் எடையை குறைப்பதற்கு போதுமான அளவு தண்ணீரை தினமும் பருக வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதே போல உடற்பயிற்சி என்பதும் மிகவும் முக்கியம். என்ன தான் நீங்கள் உணவு முறை பழக்கத்தை மாற்றினாலும் ஒரு நாளைக்கு அரை மணி நேர உடற்பயிற்சி தான் முழுமையான எடை குறைப்பிற்கு ஆதரவாக இருக்கும். அதிக அளவுக்கு நார் சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். எடை குறைப்புக்கு பழ சாறுகளை தேர்ந்தெடுப்பவர்கள் அதில் குறைந்த கலோரி மற்றும் சர்க்கரை சேர்க்காததாக பார்த்து பருகுவது நல்லது. கடைகளில் வாங்கி பருகுவதை விட வீட்டிலேயே தயாரிப்பது தான் ரொம்பவும் சீக்கிரமாக உடல் எடையை குறைக்கும். - Advertisement - உடல் எடையை கணிசமாக குறைக்க ஆப்பிள் பழச்சாறுடன் கேரட்டை சேர்த்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே பருகலாம். காலையில் முதல் உணவாக இந்த பழச்சாறை நீங்கள் பருகுவதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். இனிப்பு தேவைப்படுபவர்கள் குறைந்த அளவிலான பனை வெல்லத்தை சேர்க்கலாம். வெள்ளரிக்காய் சாறுடன் செலரி கீரையின் சாற்றையும் சேர்த்து அரைத்து அப்படியே சர்க்கரை எதுவும் சேர்க்காமல் பருகுவதன் மூலம் விரைவாக உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் வெளியேறி உடல் தூய்மையாகும். இதனால் உடல் குளிர்ச்சியற்று, உஷ்ணமும் தணியும். இது உடல் எடையை குறைப்பதற்கு ஏற்ற ஒரு இயற்கை வகை சாறாக இருக்கிறது. - Advertisement - தர்பூசணி நீர் சத்து அதிகம் கொண்டுள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். இந்த தர்பூசணி பழ சாறுடன், எலுமிச்சை பழச்சாறையும் சேர்த்து காலையில் எழுந்ததும் முதலில் பருகுவதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். இதையும் படிக்கலாமே:முகம் தங்க மாதிரி தகதகன்னு மின்ன குடிக்க வேண்டிய ஜூஸ் என்ன? புற்றுநோய், அல்சர், இதய நோய்களுக்கு கூட சிறந்த பலன் தருமாம் இந்த ஜூஸ்! என்ன ஜூஸ் அது? இஞ்சி உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அடிக்கடி இஞ்சியை உணவில் எடுத்துக் கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதனால் உடல் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். இந்த இஞ்சி சாறுடன், பைனாப்பிள் பல சாறையும் சேர்த்து பருகி வருவதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய ஊளைச் சதை குறைய ஆரம்பிக்கும். இதனால் உடல் பருமன் மெல்ல மறையும். விரைவில் ஜீரணமாக கூடிய உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும், இது போன்ற பழ மற்றும் காய்கறி சாறுகளை பருகி வருவதும் உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஒருநாள் செய்துவிட்டு எதையும் நிறுத்தக்கூடாது. தொடர்ந்து செய்து வரும் பொழுது தான் அதன் பலன் முழுமையாக கிடைக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/health-tips-tamil/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9c%e0%af%82%e0%ae%b8%e0%af%8d-udal-edai-kuraiya-juice-in-tamil/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை