வேர்க்கடலை பொடி செய்முறை | verkadalai podi seimurai in tamil

[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் மிகவும் விலை உயர்ந்த பருப்பு வகைகளை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற எண்ணத்தில் பலரும் இருக்கிறார்கள். ஆனால் விலை மலிவாக கிடைக்கக்கூடிய சில பருப்பு வகைகளிலும் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் கிடைக்கும். அப்படி சத்துக்கள் நிறைந்த பொருளாக கருதப்படுவது தான் வேர்கடலை. இந்த வேர்க்கடலையை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம், அவித்தும் சாப்பிடலாம், வருத்தும் சாப்பிடலாம் இப்படி பல வகைகளில் சாப்பிடலாம். இந்த மாதிரி சாப்பிட பிடிக்காது என்பவர்கள் வேர்க்கடலை பொடியை செய்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிட நாம் உடலில் நார்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் வேர்கடலை பொடி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும். - Advertisement - தேவையான பொருட்கள் வேர்கடலை – 250 கிராம்கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்தனியா – 5 டேபிள் ஸ்பூன்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 20புளி – நெல்லிக்காய் அளவுபெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வேர்க்கடலையை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். தோல் நீக்கிய தோல் நீக்காத என்று எந்த வேர்க்கடலை வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம். இப்பொழுது இதை எடுத்து அப்படியே ஒரு தட்டில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - மறுபடியும் அந்த கடாயை அடுப்பில் வைத்துக் கொண்டு அதில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை இரண்டும் நிறம் மாறியதும் இதில் தனியா, சீரகம் இதை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு இதில் காய்ந்த மிளகாய், புளி இரண்டையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். காய்ந்த மிளகாய் நன்றாக வறுபட்ட பிறகு இதில் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைத்து விட வேண்டும். இப்பொழுது இவை அனைத்தும் நன்றாக ஆரியபிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வறுத்து வைத்திருக்கும் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு அந்த பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு வேர்க்கடலையை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரே தடவையில் அரைக்க கூடாது. விட்டுவிட்டு தான் அரைக்க வேண்டும். நன்றாக கலந்து விட்டு கலந்து விட்டு அரைக்க வேண்டும். ஏனெனில் வேர்க்கடலையில் எண்ணெய் சத்து இருக்கிறது. நம் தொடர்ச்சியாக வேர்க்கடலை அரைக்கும் போது அதிலிருந்து எண்ணெய் சத்து வெளிப்பட்டு அதன் சுவை மறைந்துவிடும். - Advertisement - இப்படி அரைத்த இந்த வேர்க்கடலை பொடியை ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக ஆற வைத்து பிறகு ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். வாசனையான சுவையான வேர்க்கடலை பொடி தயாராகிவிட்டது. இந்த வேர்க்கடலை பொடியை சுடசுட சாதத்தில் வேர்க்கடலை பொடி, நெய் இவற்றை சேர்த்து பிணைந்து சாப்பிடுவது மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த பொடியை இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதையும் படிக்கலாமே:வெண்டைக்காய் பச்சடி செய்முறை மிகவும் எளிதில் செய்யக்கூடிய அதே சமயம் பல அற்புதமான சத்துக்கள் கொண்ட வேர்க்கடலை பொடி நீங்களும் வீட்டில் தயார் செய்து பலன் அடையுங்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024