வேர்க்கடலை பூண்டு பொடி சாதம் செய்முறை

[ad_1] - Advertisement - நம்முடைய பாரம்பரிய உணவுகளை நாம் செய்வதற்கு சிறிது சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது என்பதற்காகவே அதை எளிமையாக செய்து முடிக்கும் வகையிலும் அதே சமயம் ஆரோக்கியம் மிகுந்ததாகவும் இருப்பதற்காக அதை நாம் பொடி வகையில் தயார் செய்து வைத்துக் கொள்கிறோம். இப்படி கருவேப்பிலை பொடி, பிரண்டை பொடி, பூண்டு பொடி, வேர்க்கடலை பொடி என்று பல பொடிகள் இருக்கின்றன. அந்த பொடிகளில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் வேர்கடலை பூண்டு பொடி எப்படி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். இந்த வேர்க்கடலை பூண்டு பொடி என்பது ஆந்திராவில் மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. இதை ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு இட்லி, தோசை போன்ற டிபன் ஐட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம் சாப்பாட்டிற்கும் போட்டு சாப்பிடலாம். இதை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் தயார் செய்து அனுப்பலாம். குழம்பு செய்ய நேரமில்லை என்னும் பட்சத்தில் இந்த பொடி நமக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். - Advertisement - தேவையான பொருட்கள் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை – 150 கிராம் கொப்பரை தேங்காய் – 50 கிராம் பூண்டு – 75 கிராம் காஷ்மீர் மிளகாய் – 8 காய்ந்த மிளகாய் – 12 பொட்டுக்கடலை – 3 கைப்பிடி அளவு சீரகம் – 1 1/2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை – 2 கொத்து பெருங்காயத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு புளி – 25 கிராம் நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் உளுந்து – 1/2 ஸ்பூன் பூண்டு – ஒரு கைப்பிடி அளவு சாதம் – ஒரு கப் செய்முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கடலெண்ணையை ஊற்றி தோல் உரிக்காத பச்சை வேர்க்கடலையை போட்டு நன்றாக பொன்னிறமாக குறைந்த தீயில் வைத்து வறுத்துக் கொள்ள வேண்டும். இது பொன்னிறமாக வதங்கியதும் இதனுடன் துருவிய கொப்பரை தேங்காய், தோல் உரிக்காத பூண்டு, காய்ந்த மிளகாய் 8, காஷ்மீரி மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பூண்டு நன்றாக சிவந்ததும் இதில் பொட்டுக்கடலை, சீரகம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதனுடன் கொட்டை இல்லாத புளியையும் சேர்த்து வதக்கி அடுப்பில் இருந்து இறக்கும்பொழுது பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பையும் சேர்த்து இறக்கி விட வேண்டும். பிறகு இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - அரைத்த இந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துவிடலாம். இப்பொழுது வேர்க்கடலை பூண்டு சாதம் செய்வது பற்றி பார்ப்போம். இதற்கு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நான்கு காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, தோல் உரித்த பூண்டு ஒரு கைப்பிடி அளவு போட்டு நன்றாக வதக்க வேண்டும். பூண்டு சிவந்ததும் இதில் கருவேப்பிலை ஒரு கொத்தை போட்டு கருவேப்பிலை பொரிந்ததும் நாம் தயார் செய்வது வைத்திருக்கும் பொடியிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவு போட்டு அந்த எண்ணெயிலேயே நன்றாக வதக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதற்கேற்றார் போல் வடித்த சாதத்தை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை பூண்டு பொடி சாதம் தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே பிரண்டை குழம்பு செய்முறை அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய பாதாமை விட வேற்கடலையில் அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது என்றும் பூண்டில் கேன்சரை எதிர்க்கக்கூடிய பண்புகள் அதிகம் இருக்கிறது என்றும் மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. இவை இரண்டையும் சேர்த்து நாம் பொடி தயார் செய்து நம் வீட்டில் இருப்பவர்களுக்கு தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈஸி ஸ்டஃப்டு பணியாரம் ரெசிபி | Stuffed paniyaram recipe in Tamil

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை