கொள்ளு துவையல் செய்யும் முறை | Kollu thuvaiyal recipe in tamil

[ad_1] - Advertisement - நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய நன்மைகளை தரக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கும். நோய்கள் நீங்குவதற்கு எந்த அளவிற்கு இயற்கையான காய்கறிகள் உதவுகிறதோ அதே போல் தான் நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாற்றுவதற்கு சில பொருட்கள் உதவி செய்கின்றன. அந்த பொருட்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது கொள்ளு. இது பொதுவாக குதிரைகளுக்கு உணவாக கருதப்படுகிறது. குதிரைகள் எவ்வளவு தூரம் ஓதினாலும் களைப்பே தெரியாமல் இருப்பதற்கு காரணம் குதிரைகள் கொள்ளை சாப்பிடுவது தான். அந்த கொள்ளை நாமும் சாப்பிடும் பொழுது நமக்கும் எந்தவித உடல் சோர்வும் ஏற்படாமல் ஆரோக்கியமாக நம்மால் வாழ முடியும். மேலும் இந்த கொள்ளில் அதிக அளவு புரோட்டின்னும் நார்ச்சத்தும் இருக்கிறது. இதை உடல் எடை குறைக்க விரும்புவோர் அதிக அளவில் உண்ணா ஆரம்பிப்பார்கள். இருப்பினும் இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க கூடியது என்பதால் அதை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு மழை, குளிர் காலங்களில் சாப்பிட வேண்டும். அப்படிப்பட்ட கொள்ளை எப்படி சாப்பிட்டால் ருசியாக இருக்கும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் கொள்ளு – 1/2 கப் கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 15 பூண்டு – 7 பல் புளி – எலுமிச்சை அளவு தேங்காய் – 1/2 மூடி உப்பு – தேவையான அளவு பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளை அதில் போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். சிறிது சிவந்ததும் அது வெடிக்க ஆரம்பிக்கும். இருப்பினும் பரவாயில்லை நன்றாக சிவக்க வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பை போட்டு மறுக்க வேண்டும். இவை இரண்டும் சிறிது சிவந்த பிறகு அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, புளி இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு துருவி வைத்திருக்கும் தேங்காயை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்க வேண்டும். - Advertisement - தேங்காய் சேர்த்ததும் ரொம்ப நேரம் வதக்காமல் சிறிது நேரம் வதக்கினால் போதும். அடுப்பை அணைத்துவிட்டு இதில் பெருங்காயத் துளை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முதலில் வறுத்து வைத்திருக்கும் கொள்ளை சேர்த்து ஒரு முறை அதை அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். துவையல் பதத்திற்கு இது வரவேண்டும் என்பதனால் தண்ணீரை குறைந்த அளவை பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் பயன்படுத்தி விட்டால் இது சட்னி போன்று ஏற்படும். அருமையான கொள்ளு துவையல் தயாராகிவிட்டது. - Advertisement - இந்த துவையலை நாம் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதில் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டால் இது சட்னியாக மாறிவிடும். மேலும் விருப்பம் இருப்பவர்கள் இதில் எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போன்றவற்றை தாளித்தும் ஊற்றிக் கொள்ளலாம். இதையும் படிக்கலாமே நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை மிகவும் எளிமையான பொருளாக திகழக்கூடிய கொள்ளை வைத்து இப்படி எளிமையான முறையில் துவையல் செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்வோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை