தேங்காய் மாங்காய் சாதம் செய்முறை | Thengai mangai sadam recipe in tamil

[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிய நேரத்தில் எப்போதும் போல் சாதம் குழம்பு காய்கறி என்று செய்து தருவதற்கு பதிலாக கலவை சாதத்தை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கலவை சாதம் எப்பொழுதும் செய்வது போல் புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் மங்களூரில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சாதத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த சாதத்தின் பெயர் தான் தேங்காய் மாங்காய் சாதம். இந்த சாதத்திற்கு தொக்கு ஒருமுறை செய்துவிட்டால் போதும். நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சாதத்தில் கலந்து சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு சுவையாகவும், அதேசமயம் பல நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இந்த தொக்கு திகழ்கிறது. இதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 7 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 காஷ்மீரி மிளகாய் – 4 சீரகம் – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெள்ளை எள் -1 1/2 டீஸ்பூன் மிளகு – 1 1/2 டீஸ்பூன் உளுந்து – 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன் தனியா – 4 டீஸ்பூன் கொப்பரை தேங்காய் பவுடர் – 3 டீஸ்பூன் மாங்காய் – 2 துருவிய தேங்காய் – ஒரு மூடி கடுகு – 1 டீஸ்பூன் வேர்க்கடலை – 1 1/2 கைப்பிடி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து பொடித்த வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய், சீரகம், வெந்தயம், வெள்ளை எள், மிளகு, உளுந்து, கடலைப்பருப்பு, தனியா இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். உளுந்து சிவக்க ஆரம்பித்த பிறகு கொப்பரை தேங்காய் பவுடரையும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் வறுபட்ட பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இரண்டு மாங்காயை எடுத்து தோலை சீவி விட்டு அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு மூடி தேங்காயை எடுத்து துருவி வைத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உப்பு சேர்க்காத வறுத்த தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை சேர்க்க வேண்டும். வேர்கடலை நன்றாக வறுபட்ட பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மாங்காய் விழுதை அதில் சேர்க்க வேண்டும். பிறகு இதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இதில் மேற்கொண்டு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பொடித்த வெள்ளத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதை வடிகட்டி இந்த விழுதுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் மட்டும் பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். - Advertisement - பிறகு இதனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். இப்பொழுது எண்ணெய் அனைத்தும் மேலே பிரிந்து வந்திருக்கும். இந்த நேரத்தில் அடுப்பை அணைத்துவிட்டு சாதத்திற்கு தேவையான அளவு மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் தொக்கை பிரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். விருப்பம் இருப்பவர்கள் சாதத்தை போட்டு கிளறுவதற்கு முன்பாக தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் நெய்யையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். வடித்த சாதத்தை போட்டு நன்றாக கலந்தால் சுவையான தேங்காய் மாங்காய் சாதம் தயாராகிவிடும். இதையும் படிக்கலாமே வெந்தயக் கீரை சாதம் செய்முறை ஒரே மாதிரி எப்பொழுதும் கலவை சாதம் செய்து தருவதை விட இப்படி வித்தியாசமான முறையில் வித்தியாசமான சுவையிலும் இருக்கக்கூடிய சாதங்களை செய்து தரும்பொழுது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எந்தவித கேள்வியும் கேட்காமல் சாப்பிடுவார்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024