ஆரோக்கியம் அள்ளித்தரும் பன்னீர் திராட்சை ஜூஸ் இப்படி போடுங்கள்

[ad_1] - Advertisement - ஆரோக்கியத்திற்கு அதிக காசு செலவு செய்ய வேண்டும் என்பது இல்லை. குறைந்த விலைப் பொருட்களில் கூட ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அது யாருடைய கண்களிலும் அவ்வளவு எளிதாக புலப்படுவது கிடையாது. இதெல்லாம் வாங்கி சாப்பிட்டால் தான் திடகாத்திரமாக இருப்போம் என்று ஆயிரம் ஆயிரம் ஆக செலவு செய்து கொண்டிருப்போம், ஆனால் 50 ரூபாயில் கூட ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். அந்த வகையில் சீப் அண்ட் பெஸ்ட் பன்னீர் திராட்சை ஜூஸ் சுவையாக எப்படி போடுவது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். பன்னீர் திராட்சை வாங்கியவுடன் அப்படியே பயன்படுத்தக் கூடாது. முந்தைய காலங்களில் எல்லாம் ரசாயன சேர்க்கை அவ்வளவாக கிடையாது. ஆனால் இப்பொழுது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்று கண்ட கண்ட ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய ரசாயனங்களை சேர்த்து பழங்களில் கூட கலப்படம் செய்யப்படுகிறது. இந்த ரசாயனங்களால் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பதால் பழங்களை வாங்கி உண்பதில் கூட மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். - Advertisement - பழக்கடைகளுக்கு சென்றால் ஒரு ஓரத்தில் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்த பன்னீர் திராட்சை விலை குறைவாகத்தான் இருக்கும் என்றாலும், அதன் சத்துக்கள் எண்ணில் அடங்காதவை. ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதால் அதை யாரும் வாங்குவது கிடையாது. நல்ல பன்னீர் திராட்சையாக பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பன்னீர் திராட்சையை வாங்கி வந்த உடன் சிறிதளவு வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து திராட்சைகளை போட்டு வையுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் அதில் நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த திராட்சைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நான்கைந்து ஐஸ் கட்டிகளையும் போடுங்கள். பன்னீர் திராட்சைகளுடன் சுவைக்காக அரைமுடி எலுமிச்சை பழ சாற்றை சேருங்கள். சர்க்கரை எதுவும் போடக்கூடாது ஏற்கனவே இனிப்பு தன்மை கொண்டிருப்பதால் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தாதீர்கள். மிக்ஸியை இயக்கி ஜூசை அரைத்துக் கொள்ளுங்கள். பன்னீர் திராட்சையில் இருக்கும் விதைகளுக்கு தான் சத்துக்கள் அதிகம் எனவே விதைகள் உடைபட அரைப்பது நல்லது. - Advertisement - அரைத்து எடுத்த பின்பு ஒரு வடிகட்டியில் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஜூஸுடன் தேவையான அளவிற்கு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தேன் சேர்த்து குடிப்பதால் சருமம் ஆரோக்கியம் பெறும், பளபளப்பாக மின்னவும் செய்யும். இதனுடன் கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்தால் சுவை அபரிமிதமாக இருக்கும், விரும்பாதவர்கள் தவிர்க்கலாம். இதையும் படிக்கலாமே:சுவையான பாலக் பன்னீர் சப்பாத்தி செய்வது எப்படி? பொதுவாக பன்னீர் திராட்சையை அரைத்து ஜூஸ் போடுவதை விட அப்படியே விதைகளுடன் மென்று சாப்பிடுவது தான் நல்லது. ஆனால் அப்படி யாரும் சாப்பிடுவது கிடையாது. இந்த மாதிரி ஜூஸ் போட்டு கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு ரசித்து ருசித்து குடித்து விடுவார்கள். குழந்தைகள் கூட அதிகம் விரும்பும் இந்த ஜூஸை இப்படித்தான் போட வேண்டும். உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு அடிக்கடி இது போல பன்னீர் திராட்சை ஜூஸ் பருகி வருவது நல்லது. நீங்களும் இப்படி போட்டு குடித்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024