இட்லி மாவுக்கு பதிலாக உடுப்பி தக்காளி தோசை மாவு

[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே வகையான தோசை செய்வதை விட இது போல வித்தியாசமான தோசை செய்து கொடுத்தால் கூடுதல் தோசை சாப்பிட ஆசையாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் அதிகம் விலை கொடுத்து வாங்கக் கூடிய தோசை கூட, நம்ம வீட்டிலேயே ரொம்ப சுலபமாக தயாரித்து விடலாம். இட்லி மாவு இல்லை என்ற கவலை இனி தேவையில்லை. மாவில்லாத சமயத்தில் சட்டுனு தக்காளி தோசை மாவு எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். உடுப்பி டொமேட்டோ தோசை செய்ய தேவையான பொருட்கள்: தக்காளி – இரண்டு வெங்காயம் – இரண்டு பூண்டு – ஆறு பல் கோதுமை மாவு – அரை கப் அரிசி மாவு – அரை கப் ரவை – கால் கப் மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மல்லித்தழை – சிறிதளவு உடுத்தி டொமேட்டோ தோசை செய்முறை விளக்கம்: இந்த தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அரைக்கத் தான் போகிறோம், எனவே பொடியாக நறுக்க வேண்டிய அவசியம் இல்லை. - Advertisement - எந்த அரிசி மாவு எடுத்துக் கொண்டாலும் சரி, வறுக்காத ரவையாக இருந்தால் ரவையை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு மிக்ஸர் ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் வறுத்த ரவை, எடுத்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து ஆறு பல் பூண்டை தோலுரித்து போட்டுக் கொள்ளுங்கள். பின் காரத்திற்கு மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு தோசை மாவு பதம் வர கொஞ்சம் போல தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கரைத்தால் தோசை மாவு போல திக்காக வர வேண்டும். இப்போது நறுக்கிய மல்லித்தழை மேலே தூவி கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க உடுப்பி ஹோட்டல் தக்காளி தோசை மாவு ரெடி! - Advertisement - இதையும் படிக்கலாமே:எதிரி தொந்தரவிலிருந்து விடுபட சின்னம் இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். கல் சூடேறியதும் மிதமான தீயில் வைத்து ஒன்றரை கரண்டி மாவை எடுத்து மெலிதாக நன்கு தோசை கல் முழுவதுமாக பரப்பிக் கொள்ளுங்கள். சுடச்சுட தோசை வெந்து வர நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திருப்பி போடுங்கள். இருபுறமும் நன்கு வெந்த பிறகு தட்டில் எடுத்து கார சட்னி அல்லது தேங்காய் சட்னி கெட்டியாக வைத்து பரிமாறினால் அட்டகாசமான தக்காளி தோசை சாப்பிட சாப்பிட வயிற்றுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கும். இப்படி மட்டும் தோசை செய்து கொடுத்தால் ரெண்டு தோசை சாப்பிடும் இடத்தில், நாலு தோசை கூட சாப்பிட்டு போவார்கள். இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய இந்த மாவு விரைவாக அரைத்து பயன்படுத்தலாம், எனவே அடிக்கடி இட்லிக்கு மாவு அரைக்கணுமே என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%89%e0%ae%9f/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024