சோயா கீமா பிரியாணி டிபன் பாக்ஸ் ரெசிபி

[ad_1] - Advertisement - பிரியாணி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான பிரியாணி வகைகளில் சைவ பிரியாணிகள் செய்வது தான் சவாலானதாக இருக்கும். என்னதான் வெஜிடபிள் சேர்த்து பிரியாணி செய்தாலும், அதெல்லாம் போர் அடித்து போயிருக்கும். வித்தியாசமான முறையில் ரொம்பவே ஈசியாக செய்யக்கூடிய இந்த சோயா கீமா பிரியாணி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். சோயா கீமா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: சோயா சங்ஸ் – 100 கிராம் கடலை எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – இரண்டு தக்காளி – இரண்டு பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, கல்பாசி – தலா 2 புதினா, கொத்தமல்லி – இரண்டு கைப்பிடி அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா – 2 தேக்கரண்டி தயிர் – அரை கப் பாஸ்மதி அரிசி – ஒரு கப் சோயா கீமா பிரியாணி செய்முறை விளக்கம்: சோயா கீமா பிரியாணி தயாரிப்பதற்கு முதலில் தேவையான அளவிற்கு சோயாக்களை எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கொதித்ததும் தண்ணீரை வடிகட்டி சோயாக்களை எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்துள்ள சோயாக்களை தண்ணீரில்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். - Advertisement - இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கண்ணாடி பதம் வர நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் நீங்கியதும் தக்காளி பழங்களை சேர்த்து நன்கு மசிய வதக்கிக் கொள்ளுங்கள். இவை மசிந்து வந்ததும் ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா இலைகளையும், ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி தழைகளையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். இவை சுருள வதங்கி வந்ததும், மிளகாய் தூள் மற்றும் பிரியாணி மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போக கலந்து விடுங்கள். பச்சை வாசம் நீங்கியதும் ஒரு கப் அளவிற்கு தயிர் சேர்த்து நீங்கள் அரைத்து வைத்துள்ள சோயா கீமாவையும் சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். - Advertisement - இதையும் படிக்கலாமே:பண வரவுக்கு குரு பகவான் பரிகாரம் மசாலா அனைத்தும் இறங்கி நன்கு கொதித்ததும், ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒன்னே கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு கொதி வர குக்கரை மூடி வையுங்கள். ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு 11/4 கப் தண்ணீர் ஊற்றினால் சரியாக வரும். பிரியாணி அரிசியை 10 நிமிடம் ஊற வைத்தால் போதும். ரெண்டு விசில் வந்ததும் மணக்க மணக்க சூப்பரான சுவையில் சோயா கீமா பிரியாணி தயார்! - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%80%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024