ஆந்திரா ஸ்டைல் பெசரட்டு தோசை செய்முறை

[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு வகைகள் உண்டு. அந்த வகை பட்டியலில் ஆந்திராவில் பிரசித்தி பெற்ற இந்த பெசரட்டு தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய இந்த பெசரட்டு தோசையை அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தரும். மணக்க மணக்க மொறுமொறுன்னு பெசரட்டு தோசை எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி கற்றுக் கொள்ள இருக்கிறோம். ஆந்திரா பெசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள்: பச்சைப் பயிறு – ஒரு கப் பச்சரிசி – கால் கப் இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய் – இரண்டு சீரகம் – ஒரு டீஸ்பூன் கல் உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 1 பெசரட்டு உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: ரவை – அரை கப் தண்ணீர் – ஒரு கப் கடுகு – சிறிதளவு உளுந்து – அரை டீஸ்பூன் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – ஒன்று பெசரட்டு தோசை செய்முறை விளக்கம்: முதலில் பச்சைப் பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். பச்சை பயறுடன் பச்சரிசியும் சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற விடுங்கள். ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற விட வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் தண்ணீரை வடிகட்டி விட்டு பச்சை பயறை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு சிறு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து மைய நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இந்த விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அப்படியே மூட போட்டு ஊற விடுங்கள். அதற்குள் உப்புமா செய்து கொள்ளுங்கள். - Advertisement - பெசரட்டு உப்புமா செய்முறை: முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்துக் கொள்ளுங்கள். உளுந்து போட்டு பொன்னிறமானதும், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் அளவிற்கு வதக்கி கொள்ளுங்கள். பின்னர் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். கொதிக்கும் நீரில் வறுத்த ரவை அரை கப் அளவிற்கு சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள். நீர் வற்றி உப்புமா கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இதையும் படிக்கலாமே:நினைத்ததை நடத்திக்காட்டும் குறுமிளகு பரிகாரம் இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். நீங்கள் தயாரித்து வைத்துள்ள மாவை நன்கு மெலிதாக தோசை கல்லை சுற்றிலும் பரப்பிக் கொள்ளுங்கள். பின் அதன் மீது பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவுங்கள். கொஞ்சம் மல்லித்தழை இருந்தாலும் தூவிக் கொள்ளலாம். பின் நீங்கள் தயாரித்து வைத்துள்ள உப்புமாவை ஒரு கரண்டி வைத்து பாதி அளவுக்கு பரப்பிக் கொள்ளுங்கள். இப்போது தோசை ஒருபுறம் நன்கு வெந்ததும் இரண்டாக மடியுங்கள். அவ்வளவுதான் எடுத்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான். பெசரட்டு தோசைக்கு இஞ்சி சட்னி, காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக, சூப்பராக இருக்கும். இனி இட்லி மாவுக்கு குட் பை தான். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை