இன்றைய ராசிபலன் – 26 நவம்பர் 2024

[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். நிம்மதியாக சாப்பிடலாம். மனநிறைவோடு இருப்பீர்கள். இறைவனை வழிபாடு செய்வீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கணவன் மனைவி குழந்தை உறவுக்குள் ஒரு பலம் ஏற்படும். அது மனதிற்கு ஒரு இதமான அனுபவத்தை கொடுக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நட்பு கிடைக்கும். அந்த நட்பு உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிரிகளாக இருப்பவர்களும் உங்களைப் புரிந்து கொண்டு, நண்பர்களாக மாறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் சண்டை போட்டுக் கொண்டிருந்த பக்கத்து கடைக்காரர்களும் நட்பு உறவு கொள்வார்கள். சந்தோஷம் இருக்கும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உங்கள் வாழ்க்கையை பார்த்து சின்ன பொறாமை இருக்கும். கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் வெளிப்படையாக பேச வேண்டாம். கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிறைவாக இருக்கும். எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு உண்டாகும். வேலையில் முழுமூச்சோடு செயல்படுவீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம். சுறுசுறுப்பு காணப்படும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். பேச்சாற்றல் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக அமையும். - Advertisement - சிம்மம் சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். முடிக்கவே முடியாத வேலையை உங்கள் கையில் கொடுத்தால் கூட கச்சிதமாக அந்த வேலையை முடித்து தருவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருக்கும். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு பரிசுகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். அவார்டு பட்டியலில் நிச்சயம் உங்கள் பெயர் இடம் பெறும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரம் தொழில் எல்லாம் சிறப்பாக நடக்கும். - Advertisement - துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். முயற்சியே செய்ய மாட்டீங்க. இருந்தாலும் முயற்சி செய்தால் தோற்றுவிடுமோ, என்று பயத்திலேயே வரும் வாய்ப்புகளை தவறவிட கூடிய சூழ்நிலை உண்டாகும். மன பயத்தை ஒதுக்கி வையுங்கள். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். முன்னேற்றத்திற்கு தேவையான வழியை பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். உங்களுடைய வேலைக்கான அங்கீகாரமும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி போடாமைகள் நீங்கும்‌ வியாபாரத்தை முன்னுக்கு கொண்டு வர கடினமாக உழைப்பீர்கள். வெற்றியும் கிடைக்கும். தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனதில் பொறாமை எண்ணம் எழும். அடுத்தவர்களை பார்த்து இதைப்போல் நாமும் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆடம்பர வாழ்க்கை உங்களை ஈர்க்கும். குறுக்குப் பாதையில் செல்ல மனம் சிந்திக்கும். ஆனால் எல்லாமே தவறு. நமக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதுபோலத்தான் நாம் வாழ வேண்டும். ஒருபோதும் நீதிக்கு புறம்பாக நடக்கக்கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிரிகளை போராடி வெல்லக்கூடிய திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சின்ன தடுமாற்றம் வரலாம். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி வியாபாரம் தொழில் எல்லாம் சமூகமாக நடைபெறும். வாகனங்களை செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். அடுத்தவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் உங்களை புகழ்ந்து இரண்டு வரி பேசினால் போதும். நீங்களே மனம் மகிழ்ச்சியோடு கொடுத்து விடுவீர்கள். உங்களுடைய மனதும் இன்று பாராட்டுக்கு ஏங்கும். மனது இன்று எதையோ எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் இருக்காத சூழ்நிலை உண்டாகும். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களை பேசி சமாளிக்கவே நேரம் போதாது. மேனேஜரின் தொல்லை ஒரு பக்கம் இருக்கும். நம்முடைய முன்னேற்றத்தை தடை படுத்த நாலு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். போட்டி பொறாமைகளோடு இன்றைய நாளை கடத்துவதில் சிரமங்கள் இருக்கும். பொறுமையாக சிந்தியுங்கள் நல்ல வழி பிறக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/jodhidam-prediction/indraya-rasi-palan/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-26-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil