தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள்
[ad_1]
- Advertisement -
தீபாவளி என்றதுமே இனிப்பு சாப்பிடுவது, பட்டாசு வெடிப்பது, புது ஆடைகள் உடுத்துவது என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அதையும் தவிர்த்து நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை நம்மால் உணர முடியும். நீண்ட நாட்களாக வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களும், எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றிகளை கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் தீபாவளி அன்று சில வழிபாடுகளையும் மந்திர உச்சாடலையும் கூறுவதன் மூலம் அவர்களுடைய வறுமையும் கஷ்ட சூழ்நிலையும் மாறும் என்று கூறப்படுகிறது அந்த மந்திரங்களை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள்
தீபாவளி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் குபேரரையும் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு சேர்த்து நம்முடைய முன்னோர்களையும் நாம் வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று கண்டிப்பான முறையில் அனைவரின் இல்லத்திலும் கங்காஸ்நானம் செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். சாதாரண தண்ணீரே அன்றைய நாளில் கங்கை நதிக்கு உரிய புண்ணியத்தை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அன்றைய நாளில் அனைவரும் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமும் வைத்திருப்பார்கள். அவ்வாறு குளிக்கும் பொழுது இந்த ஒரு மந்திரத்தை ஒரு முறை கூறுவதன் மூலம் அவர்களைப் பிடித்த தரித்திரங்கள் முற்றிலும் நீங்கும்.
- Advertisement -
மந்திரம்
ஈசனின் திருசடையில் இருப்பவளேநாராயணனின் பாதத்தை நீராட்டி மகிழ்பவளேஎல்லா விதமான பாவங்களையும் போக்குபவளேஅன்னையே கங்கா தேவியே உம்மை வணங்குகின்றேன்.
- Advertisement -
இந்த மந்திரத்தை ஆண்களும் பெண்களும் குளிக்கும் பொழுது கூறுவதன் மூலம் கங்காதேவியின் அருளை பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் நம்மை பிடித்த பீடைகளும் விலகி ஓடும். குளித்து முடித்துவிட்டு புத்தாடை அணியும்போது ஒரு மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
- Advertisement -
ஓம் சிவாய போற்றிஓம் நாராயணாய போற்றிஓம் வாசுதேவாய போற்றிஓம் சக்தியே போற்றிசர்வ காரிய சித்தி தர வேண்டுகிறேன் போற்றி போற்றி
எந்த ஒரு விசேஷமான நாளாக இருந்தாலும் அன்றைய தினத்தில் வழிபாடு செய்வது என்பது அனைவரும் பின்பற்றக்கூடிய வழக்கமே. அவ்வாறு நாம் வீட்டில் வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் விளக்கு ஏற்றுவோம். அவ்வாறு விளக்கேற்றும் போது கூற வேண்டிய மந்திரம்
பொன் பொருள் பெருகட்டும் தீபமே போற்றிவிவசாயம் செழிக்கட்டும் தீபமே போற்றிமங்களம் பெருகட்டும் தீபலட்சுமியே போற்றி
இந்த மந்திரத்தை கூறி தீபம் ஏற்றி வழிபாடுகள் அனைத்தையும் செய்து முடித்த பிறகு காலை உணவாக தெய்வத்திற்கு படைத்த பலகாரங்களை சாப்பிடுவோம். அவ்வாறு சாப்பிடுவதற்கு முன்பு கூற வேண்டிய மந்திரம்
செல்வங்களின் வடிவாய் இருந்து தனம் தானியம் போன்ற எல்லாம் கிடைத்திட அருள்பவளே, ஒப்பில்லாதவளே, பக்தர்கள் மீது கருணை மழை பொழிய வருபவளே அன்னை காமாட்சி தேவியே உன்னை வணங்குகிறேன்.
இதையும் படிக்கலாமே:தன வரவை அதிகரிக்கும் மந்திரம்
இந்த எளிமையான தமிழ் மந்திரங்களை அதற்குரிய நேரத்தில் உச்சரித்து அந்த வேலையை செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய வறுமை, கஷ்டம் போன்ற அனைத்தும் நீங்குவதோடு செல்வ செழிப்பும், தனதானியமும் பெருகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
- Advertisement -
[ad_2]
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/
கருத்துகள்
கருத்துரையிடுக