உணவு கொடுத்தல் சைவ மடத்தின் அன்பு ஃ மேம்பாடு

[ad_1] 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், இந்த நிலவுலகில் மூத்த நாகரிகமுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகள் ஒன்றில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது சதுர வடிவிலான முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி. லெ. சுபாஸ் சந்திர போஸ், காரைக்குடி காசி ஸ்ரீ கி. காளைராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியாவது – அடையாள எண் ஏதுமில்லாத இந்த முத்திரை தற்போது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் உள்ளதொரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையின் மேல் பகுதியில் 8 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில்  5-ஆவது எழுத்தின் கீழே 6-ஆவது எழுத்தும், 8-ஆவது எழுத்துக்கு உள்ளே 7-ஆவது எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ் பகுதியில் எருதின் உருவமும், குழுத்தாழி என்னும் மரத்தால் செய்யப்பட்ட மாட்டுத் தொட்டி ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை மிருதுவான துணி அல்லது மரப்பட்டையின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக – ஊ + ண் + (இ)ட் + ட + ஆ + தீ + (ன மே), ‘ஊண் இட்ட ஆதீனமே’ எனப் படிக்கப்படுகிறது. இவற்றிலுள்ள ‘ஊ’ என்பது 4-ஆவது உயிர் எழுத்து, ‘ண்’ என்பது 4-ஆவது மெய்; எழுத்து, ‘(இ)ட்’ என்பது 5-ஆவது மெய் எழுத்து, ‘ட’ என்பது 5-ஆவது உயிர்மெய்; எழுத்து, ‘ஆ’ என்பது 2-ஆவது உயிர் எழுத்து, ‘தீ’ என்பது 11-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய்; எழுத்து, ‘மே’ என்பது 10-ஆவது உயிர்மெய் எழுத்து ஆகியவையாகும். ஊண் : உணவு(இ)ட்ட : கொடுத்த(ல்) (ஈதல்), படைத்த(ல்) (பரிமாறுதல்)ஆதீனமே : சைவ மடத்தின் அன்பு ஃ மேம்பாடுபொருள்: உணவு கொடுத்தல் சைவ மடத்தின் அன்பு ஃ மேம்பாடு இந்த முத்திரை, ‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்பதன் அடிப்படையில் அனைத்து சீவராசிகளுக்கும் உண்ண உணவு அளிப்பதே சைவ மடத்தின் சிறப்புக்களில் மேன்மையானது என்பதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார். Thanks: T.L.Subash Chandira Bose காரைக்குடி, முனைவர் காசி ஸ்ரீ காளைராசன் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?feed_id=3517&_unique_id=6762c5747fc4d

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil