நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு இஞ்சி குழம்பு

[ad_1] - Advertisement - எங்கு பார்த்தாலும் மழையாக இருக்கிறது. மழை முடிந்த பிறகு பனிக்காலம் ஆரம்பித்து விடும். இந்த இரண்டு காலங்களிலும் பலருக்கும் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிது புதிதாக காய்ச்சல் உருவாகும். குடும்பத்தில் ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அந்த குடும்பமே பாதிக்கப்படும். வெளியில் செல்லக்கூடியவர்களுக்கு சமூகத்தில் இருந்தும் இந்த தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பாடாய்ப் படுத்தி விடும். இந்த தொற்று நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நாம் நம்முடைய உணவிலேயே சில மாற்றங்களை கொண்டு வந்தால் போதும். அப்படி வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ இஞ்சி பூண்டை வைத்து இந்த முறையில் குழம்பு செய்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிப்பதோடு எந்தவித தொற்று நோய்களும் வராமல் பாதுகாக்க முடியும். அந்த பூண்டு இஞ்சி குழம்பை பற்றி நான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முழு பூண்டு – 2இஞ்சி – 3 இன்ச்மிளகு – 1 1/2 ஸ்பூன்தனியா – 1 ஸ்பூன்சீரகம் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்புளி – சிறிதளவுஎண்ணெய் – 1 1/2 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு. செய்முறை முழு பூண்டாக இரண்டு பூண்டை எடுத்து அதன் பற்களை தனியாக பிரித்து தோலை உரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதைப்போல் இஞ்சியின் தோளையும் நீக்கி அதையும் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய பூண்டாக இருக்கும் பட்சத்தில் அதை இரண்டு மூன்றாக கூட நறுக்கிக் கொள்ளலாம். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். - Advertisement - பூண்டின் நிறம் மாறியதும் அதிலிருந்து ஒரு சிறிதளவு மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் மீதம் இருக்கும் பூண்டுடன் இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சியும் லேசாக வதங்கியதும் மிளகு, தனியா, சீரகம், புளி போன்றவற்றை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு வாசனை வரும். வாசனை வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதை இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து அரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்க்க வேண்டும். பிறகு அந்த மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி அந்த விழுதுடன் சேர்த்து மூன்றிலிருந்து நான்கு நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். ஒரு நிமிடம் கழித்து இதில் நாம் எடுத்து வைத்திருந்த பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். விருப்பம் இருப்பவர்கள் இதில் உருளைக்கிழங்கு, பன்னீர், கொண்டை கடலை போன்றவற்றை வேகவைத்தும் சேர்த்துக் கொள்ளலாம். குழம்பு கிரேவி பதத்திற்கு இருக்க வேண்டும். அவ்வாறு கிரேவி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். - Advertisement - இப்பொழுது இந்த குழம்பை சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிடுவதன் மூலம் இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களின் மருத்துவ குணமும் நம் உடலுக்கு வந்து சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிக்கும். உடலில் இருக்கக்கூடிய சளிகள் வெளியேறும். இதையும் படிக்கலாமே:ரவை கார குழி பணியாரம் இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதமான இந்த பொருட்களை பயன்படுத்தி குழம்பு செய்து அடிக்கடி உண்பதன் மூலம் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. நோயால் பாதிக்கப்பட்டவர்களும் எந்தவித நோயும் வரக்கூடாது என்று நினைப்பவர்களும் இந்த குழம்பை செய்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85/?feed_id=3249&_unique_id=6759cc92cede6

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

பூஜை அறைக்கான வாஸ்து - பூஜை அறைக்கான வாஸ்து குறிப்புகள் மற்றும் அலங்கார யோசனைகள்