புரதச்சத்து மிகுந்த கொள்ளு இட்லி செய்முறை

[ad_1] - Advertisement - இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தேவையற்ற உடல் பருமன் என்பது இருக்கிறது. இதனால் அவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உண்டாகின்றன. இந்த உடல் பருமனை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனால் பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அதனால் தான் இயற்கையிலேயே உணவின் மூலம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி உணவின் மூலமாகவே உடலிடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாங்கள் உண்ணக்கூடிய உணவில் சிறுசிறு மாற்றங்களை மேற்கொண்டாலேயே விரைவிலேயே அவர்களுடைய உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. அப்படி மாற்றக்கூடிய ஒரு உணவு பொருளாக தான் காலை உணவு திகழ்கிறது. காலையில் எப்பொழுதும் போல் இட்லி, தோசை என்று சாப்பிடுவதற்கு பதிலாக கொள்ளு இட்லி, கொள்ளு தோசை என்று சாப்பிடுவதன் மூலம் உடல் இடை குறையும் என்று கூறப்படுகிறது. கொள்ளில் அதிகளவு புரதச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கிறது. இது தேவையற்ற அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுகிறது. அதனால் அப்படிப்பட்ட கொள்ளை வைத்து எப்படி கொள்ளு இட்லி, கொள்ளு தோசை செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் கொள்ளு – 2 கப்இட்லி அரிசி – 3 கப்உளுந்து – 1 1/4 கப்வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் கொள்ளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதில் சிறிது சிறிது கற்கள் இருக்கும் என்பதால் அதை பார்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற்றி விடுங்கள். பிறகு மூன்றாவது முறையாக தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - நான்கு மணி நேரம் கழித்து இவை அனைத்தையும் கிரைண்டரில் போட்டு நன்றாக இட்லி மாவு பதத்திற்கு மாவு அரைத்துக் கொள்ள வேண்டும். இதை இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்து விடுங்கள். காலையில் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும். இப்பொழுது தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இட்லி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு இட்லி தட்டில் இட்லியை ஊற்றி 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். பஞ்சு போன்ற மிருதுவான ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த கொள்ளு இட்லி தயாராகிவிட்டது. இதற்கு காரமாக இருக்கக்கூடிய சட்னி எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்கும். இந்த மாவை பயன்படுத்தி தோசை கூட ஊற்றிக் கொள்ளலாம். இதையும் படிக்கலாமே:செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி பாயாசம் செய்முறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. மேலும் நார்ச்சத்து இருந்தால்தான் நம்முடைய உடல் சத்துக்களை உறிஞ்சி எடுக்க முடியும். இவை இரண்டும் நிறைந்திருக்கக் கூடிய கொள்ளை இந்த முறையில் அனைவருக்கும் செய்து தருவதன் மூலம் நமக்கு வேலையும் சுலபமாக இருக்கும். அனைவரின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/?feed_id=3406&_unique_id=675f1382e5290

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை