தேவருலகப் பாடுங்குலத்தான் கோட்டை / தேவருலக சிவபக்தனான ஓரசுரனின் கோட்டை  

[ad_1] எம்-1988எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி நாகரிக முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 3.1, பக்கம் – 95லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் – 420லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 7 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது, 5-ஆவது, 6-ஆவது ஆகிய 5 எழுத்துக்கள் இணைந்துள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரை துணி, மரப்பட்டை ஆகிய மிருதுவானவற்றின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக, ப + (ரு + பா + ண + னி + ன் ) + சோ. பரு பாணனின் சோ எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில் ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘பா’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ண’ என்பது 6-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘னி’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன்’ என்பது 18-ஆவது மெய் எழுத்து, ‘சோ’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து  ஆகியவையாகும். ‘பரு’ என்பதற்கு கணு (உறுப்புப் பொருத்து), கடல், மலை, துறக்கம் (தேவருலகம்) எனவும், ‘பாணனின்’ என்பதற்கு பாடுங்குலத்தானின், வீணன், சிவபக்தனான ஓரசுரனின் எனவும், ‘சோ’ என்பதற்கு அரண், கோட்டை எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. இந்த முத்திரை தேவருலகப் பாடுங்குலத்தானின் கோட்டை / தேவருலக சிவபக்தனான ஓரசுரனின் கோட்டை என்பதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார். [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/?feed_id=2988&_unique_id=67519decb73be

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை