சுவையான முள்ளங்கி பொரியல் செய்முறை | suvaiyana mulangi poriyal seimurai in tamil

[ad_1] - Advertisement - தினமும் சமையல் செய்யும்பொழுது என்ன குழம்பு வைப்பது என்று எந்த அளவுக்கு யோசிக்கிறோமோ அதே அளவிற்கு அதற்கு தொட்டுக் கொள்வதற்காக எந்த காய்கறி செய்வது என்பதையும் யோசிக்க தான் செய்கிறோம். பலரும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதற்காக எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களையே செய்து கொடுக்கிறார்கள். அது எந்த அளவிற்கு சுவையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய உடல் நலத்திற்கு கேடை விளைவிக்க கூடியதாகவே இருக்கிறது. முடிந்த அளவிற்கு எண்ணெய் குறைவாக சேர்க்கக்கூடிய காய்கறிகளை நாம் பயன்படுத்தினோம் என்றால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கும். அதிலும் சத்து மிகுந்த காய்கறிகளை நாம் சேர்ப்பதன் மூலம் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முள்ளங்கியை வைத்து செய்யக்கூடிய ஒரு பொரியலை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/4 கிலோமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபச்சை மிளகாய் – 4கருவேப்பிலை – 2 கொத்துசீரகம் – ஒரு டீஸ்பூன்தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்பூண்டு – 6 பல்எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்கடுகு – ஒரு டீஸ்பூன்உளுந்து – ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்வெங்காயம் – 1 செய்முறை முதலில் முள்ளங்கியை சதுரமாக சற்று கனமாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து முள்ளங்கியை அதில் போட்டு முள்ளங்கி மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் சேர்த்து மூடி போட்டு நன்றாக வேக விடுங்கள். முள்ளங்கி நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். - Advertisement - இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, சீரகம், தேங்காய் துருவல், பூண்டு இவற்றை சேர்த்து கொரகொரப்பாக அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். உளுந்தும், கடலைப்பருப்பும் சிவந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பிறகு வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து அதில் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் சேர்த்து அதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒரு நிமிடம் நன்றாக வதக்கிய பிறகு அதன் பச்சை வாடை போய்விடும். - Advertisement - இப்பொழுது நாம் வேக வைத்திருக்கும் முள்ளங்கியை எடுத்து அதில் சேர்த்து மசாலாவும் முள்ளங்கியும் நன்றாக சேரும் அளவிற்கு கலந்து விட வேண்டும். ஒரு நிமிடம் இது அடுப்பில் அப்படியே இருக்கட்டும். மசாலாவும் முள்ளங்கியும் ஒன்றாக சேர்ந்து மசாலாவின் சாறு முள்ளங்கியில் இறங்கினால் போதும். அவ்வளவுதான் முள்ளங்கி பொரியல் தயாராகிவிட்டது. இந்த பொரியலை எதற்கு வேண்டுமானாலும் நாம் தொட்டுக் கொள்ளலாம். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதையும் படிக்கலாமே: முள்ளங்கியை வைத்து சாம்பார், புளி குழம்பு, கூட்டு என்று செய்வதற்கு பதிலாக ஒரு முறை முள்ளங்கி பொரியலை இந்த மாதிரி செய்து பாருங்கள். முள்ளங்கி வாடையும் இல்லாமல் சுவையாகவும் அருமையாகவும் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2/?feed_id=3735&_unique_id=6772dd884606e

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil