பண வரவை அதிகரிக்கும் மகாலட்சுமி மந்திரம்

[ad_1] - Advertisement - நாம் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் பல விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். இதற்கு முக்கியமான காரணம் இந்த உலகத்தில் பணம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிலைதான். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சிலர் மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடியும். சம்பாதித்த பணத்தை தங்கள் கைவசம் சேமிப்பாக வைத்துக் கொள்ள ஒரு சிலரால் மட்டுமே முடியும். பலருக்கும் அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பணவரவு என்பது ஏற்படாது. அதையும் மீறி ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வீண் விரயமாக மாறிவிடும். அப்படிப்பட்டவர்கள் தினமும் உச்சரிக்க வேண்டிய மகாலட்சுமியின் ஒரு வரி மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். மகாலட்சுமி மந்திரம் பண வரவை அதிகரிப்பதற்கு உதவக்கூடிய தெய்வங்களுள் முதன்மையான தெய்வமாக திகழக்கூடியவர் மகாலட்சுமி என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களுக்கு பணம் மட்டுமல்லாமல் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை செய்ய இயலாதவர்கள் கூட இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் உச்சரித்தாலே மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது கிடைக்கும். அந்த மந்திரத்தை எப்படி சொல்வது என்று தெரிந்து கொள்வோம். - Advertisement - இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சொல்லலாம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் சொல்லலாம். நல்ல சுப முகூர்த்த நாளாக பார்த்து ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த நாளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாதவாறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கும் முன்பாக ஒரு வெள்ளி குங்குமச்சிமிழில் வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளி குங்குமச்சிமிழ் இல்லை என்றாலும் சாதாரண குங்குமச்சிமிழ் வைத்துக் கொள்ளலாம். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்த வர அமர்ந்து கொண்டு மகாலட்சுமி தாயாரின் இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். - Advertisement - இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு உங்களுடைய வலது கையில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை ஊற்றி மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைக்க வேண்டும். வேண்டுதலை வைத்த பிறகு அந்த தேனை மூன்று முறை நக்கி சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு முடித்த பிறகு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக இருக்கக்கூடிய குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இந்த முறையில் இந்த மந்திரத்தை கூறி தேனை சாப்பிட்டு வருபவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளால் பண வரவிற்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும். வந்த பணம் சேமிப்பாக உயரும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். மந்திரம் “ஓம் ஸ்ரீம் ப்ரிசி நமஹ” இதையும் படிக்கலாமே:அழிந்து வரும் ஜடாமாஞ்சில் பயன்கள் இந்த ஒரு வரி மந்திரத்தை முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து தினமும் உச்சரிப்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளால் செல்வ வளம் உயரும், பணவரவில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%aa%e0%ae%a3-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be/?feed_id=4146&_unique_id=67942f9cbaf9f

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil