கிரிஸ்பியான ஜவ்வரிசி வடை செய்முறை | crispy javvarisi vadai seimurai in tamil

[ad_1] - Advertisement - மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் ஐட்டத்தை சாப்பிட வேண்டும் என்று ஒவ்வொருவருமே நினைப்போம். அதிலும் குறிப்பாக வேலையில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பக்கூடிய குழந்தைகளாக இருந்தாலும் சரி ஏதாவது ஒன்று சூடாக சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு கடையிலிருந்து வாங்கி தருவதை விட நாமே வீட்டில் செய்து கொடுக்கலாம் என்றுதான் யோசிப்போம். அப்படி செய்து கொடுக்க யோசிப்பவர்கள் பஜ்ஜி, வடை என்று எப்பொழுதும் போல் செய்வார்கள். வடை செய்வதாக இருந்தால் அதற்காக பருப்பை ஊரப்போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து பிறகு அதில் வடை செய்வார்கள். அதற்கு பதிலாக மிகவும் எளிமையாக எந்தவித சிரமமும் படாமல் செய்யக்கூடிய ஒரு வடை ஒன்று இருக்கிறது. அதுதான் ஜவ்வரிசி வடை. ஜவ்வரிசியை பயன்படுத்தி அதனுடன் எந்த மாவையும் சேர்க்காமல் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு வடையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் ஜவ்வரிசி – 1/4 கிலோபெரிய வெங்காயம் – 2பச்சை மிளகாய் – 4இஞ்சி – ஒரு விரல் அளவுசீரகம் – ஒரு டீஸ்பூன்கருவேப்பிலை – 3 கொத்துகொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுஉப்பு – 1/2 டீஸ்பூன்பிரெட் பாக்கெட் – ஒன்றுஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை முதலில் ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதற்கு மாவு ஜவ்வரிசியை தான் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை கழுவி சுத்தம் செய்த பிறகு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஜவ்வரிசி பெரியதாக வந்திருக்கும். அதை எடுத்து அமுக்கும் பொழுது அது நன்றாக மாவு போல மாறிவிடும். இப்பொழுது இதை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - இரண்டு பெரிய வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சியையும் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக நம் ஊற வைத்திருந்த ஜவ்வரிசியையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரட் ஒரு பாக்கெட் எடுத்து அந்த பிரடை சிறிது சிறிதாக நறுக்கி அதில் போட்டு நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். வேக வைத்த உருளைக்கிழங்கையும் இதற்கு பதிலாக சேர்த்துக் கொள்ளலாம். இதில் நாம் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. வெங்காயத்தில் இருக்கக்கூடிய தண்ணீரும் ஜவ்வரிசியில் இருக்கக்கூடிய தண்ணீருமே இதற்கு போதுமான அளவாகவே இருக்கும். - Advertisement - இவை அனைத்தையும் கையை வைத்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். நன்றாக பிணைந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடை பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். மிதமான சூடு வந்த பிறகு மிதமான தீயில் வைத்து நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை மசால்வடை போல் தட்டி எண்ணெயில் போட வேண்டும். இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து வடையை திருப்பிப்போட்டு இரண்டு நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் சுவையான வேலை சுலபமாக செய்யக்கூடிய ஒரு அற்புதமான ஜவ்வரிசி வடை தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே:காரசாரமான காரச்சட்னி ரெசிபி மாலை நேரத்தில் டீயுடன் இந்த வடையை வைத்து ஒருமுறை சாப்பிட்டாலே போதும் ஒவ்வொரு முறையும் இந்த வடைதான் வேண்டும் என்று வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் அடம்பிடிக்கவே ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை செய்துதான் பாருங்களேன். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9c%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88/?feed_id=3797&_unique_id=677824785c956

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil